கேள்வி – பதில்கள் 3-10-2007

வே. மதிமாறனிடம் கேளுங்கள்

 கன்னட பிரசாத்திற்கு தமிழ் இதழ்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனவே?

சிவகுமார், திருப்பூர்.

ஒரு வேளை “தொழில்’ ஒற்றுமை காரணமோ என்னவோ? ஏன்னா இரண்டு பேருமே நடிகைகளைதான் முதலீடா வைச்சி தொழில் நடத்துகிறார்கள். தமிழக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கன்னட பிரசாத்தின் ‘தீரமிக்க’ வாழ்க்கை வரலாற்றை பத்திரிகைகள் போட்டி போட்டு வெளியிடுகின்றன. அவைகளை அவர் படிக்க நேர்ந்தால், திடுக்கிட்டிருப்பார். “இவர்கள் நம்ம “தொழிலுக்கு’ வந்தால் நம்மநெலமை அதோ கதியாகியிருக்கும். நல்லவேளை ஜெயில் தண்டனையோடு தப்பிச்சோம்’ என்று. கன்னட பிரசாத் நடிகைகளுக்கு, தொழில் அதிபர்களுக்கு, பணக்காரர்களுக்கு “மாமா வேலை’ பார்த்தார். இந்தப் பத்திரிகைகள் வாசகர்களுக்கு ‘மாமா வேலை’ பார்க்கிறது.   

சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் திமுக காரர்களால் தகர்க்கப்பட்டுள்ளதேஎன்னதான் நடக்கிறது தமிழ் நாட்டில்? எம்.ராமமூர்த்தி.

ram_bridge_lanka.jpg 

இப்போதுதான் தமிழ்நாட்டில் நல்ல அறிகுறிகள் தென்படுகிறது.  

இந்து முன்னணி பெரியார் சிலையை இடித்தபோது  பெரியாரின் உண்மை உணர்வாளர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகலைஞரின் தலையை வெட்ட வேண்டும் என்று  யாரோ வட இந்தியாவில் உள்ள  ‘வாந்திபேதிஎன்கிற சாமியார் ஒருவன் அறிவித்த வெறுப்புக்கு, பதிலாக சுயமரியாதை உள்ள திமுக தொண்டர்களின் கொதிப்பு, என்று தமிழ்நாடு பெரியார் வழியில் களைகட்டியிருக்கிறது. 

ராமரையே இடித்த தமிழ்நாட்டிற்கு, ராமர் பாலம் எம்மாத்திரம்? 

சீதையை மணம் முடிப்பதற்காக ஜனகன் வைத்த வில்லை முறித்தான் ராமன்.  

பெரியாரோ ராமனையே முறித்தார். 

அவர் வாழ்ந்த தமிழ்நாடு என்பது இப்போதுதான் தமிழர்களுக்கு ஞாபகம் வந்திருக்கிறது. 

உங்கள் கேள்வியில் ஒரு சின்ன திருத்தம், பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் தகர்க்கப்படவில்லை.

தாக்குதலுக்கு மட்டும் உள்ளாகி இருக்கிறது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

உங்கள் வருத்தம் வேறு.  

என் வருத்தம் வேறு.   

 

 

நகைக்கடைக்காரன் அட்சய திரிதியை என்று சொல்லி மக்களை கூட்டமாக கடையில்

குவிப்பது பற்றி  உங்கள் கருத்து?

ராமஜெயம்

jj.jpg 

சமூக விழிப்புணர்வு மே மாத இதழில் இப்படி எழுதினேன்,

அட்சய திருதியை அன்று நகை வாங்கினால்

மிகவும் நல்லதாம்.

உண்மைதான்.

நகைக்கடைக்காரனுக்கு.

Advertisements
Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

செப்டம்பர் 2007 – சமூக விழிப்புணர்வு

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

* சேலம் ரயில்வே கோட்டம் விவகாரத்தில் மலையாளிகள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்களே? என்னதான் செய்வது அவர்களை?

க.விஸ்வநாதன், சென்னை. 

முல்லை பெரியாறு, சேலம் கோட்டம் – இவைகளில் தமிழகத்துக்கு எதிராக நடந்து கொள்ளும் கேரளத்தவர்கள் மீது தமிழகத்திலிருந்து ஆந்தராக்ஸ்போன்ற ஒரு கொடுமையான கிருமி ஏவப்படடு இருக்கிறது. இதில் வேடிக்கை, அந்தக் கிருமியை மலையாளிகள் விரும்பி வரவேற்கின்றனர்.

vijay.jpg

அந்தக் கிருமியின் பெயர் போக்கிரி”.ஆம், விஜய் நடித்த போக்கிரிபடம் கேரளாவில் தமிழிலேயே வெளியாகி மலையாள படங்களை பின்னுக்குத் தள்ளி,  சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. நல்ல கதையம்சம் உள்ள சினிமாவை ரசித்துக் கொண்டிருந்த மலையாளிகள் இப்போது விஜய் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்.

ஏதோ தமிழனால முடிஞ்சது.  

* ஐ.டி. கம்பெனிகளின் சம்பளத்தைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது, இவ்வளவு நாள் இந்திய முதலாளிகள் நம் தொழிலாளர்களுக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு குறைவானது என்று?

க.சத்தியமூர்த்தி, சேலம்.

 உண்மையில் ஐ.டி கம்பெனிகள் தருகிற சம்பளம் குறைவானது. ஒப்பிட்டளவில் இதே வேலையை பார்க்கிற அமெரிக்கர்- ஐரோப்பியர்களுக்குத் தருகிற சம்பளத்தில் பாதிதான் இந்தியர்களுக்குத் தரப்படுகிறது.இந்த குறைந்த சம்பளத்திற்காகத்தான் இந்தியர்களுக்கு அன்னிய நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை தந்தது கோடி கோடியாய் கொள்ளை அடிக்கின்றன.கிராமப்புறத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கு, சென்னை துணிக்கடை ஒன்றில் வேலை கிடைத்தால், அது சிரமமான வேலையாய் இருந்தாலும் மாதச் சம்பளமும் நகர வாழ்க்கையும் அவருக்கு ஒரு அந்தஸ்தையும் மயக்கத்தையம் தரும் அல்லவா? அதுபோல் ஒரு மயக்கத்தில் இருக்கிறார்கள் ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.

உலக தொழிலாளர்கள் அனைவருக்காகவும் எட்டு மணி நேர வேலை திட்டத்தை,  எந்த அமெரிக்க தொழிலாளர்கள் தங்கள் ரத்தத்தையும் உயிரையும் சிந்தி பெற்றுத் தந்தார்களோ? அதே அமெரிக்காவில் இருந்துதான் 12 மணி நேர வேலைத் திட்டம் உலகம் முழக்க பரவிக் கொண்டிருக்கிறது.டீக் கடையில் வேலை செய்கிற தோழர், எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யசொன்னால், முடியாது என்று மறுத்துவிடுவார். முடியுமா, ஐ.டி. கம்பெனி ஊழியர்களால்?  

* திரைப்பட நடிகர்களைப் பற்றி அதிகம் சொல்கிறீர்கள். நடிகளைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லையே?

சி.பாக்யலட்சுமி, சென்னை. 

சொல்லியிருக்கிறேன். மீண்டும் அதை அழுத்தத்தோடு சொல்வதற்கான வாய்ப்பாக உங்கள் கேள்வியை பயன்படுத்திக் கொள்கிறேன். மனோரமா, ஒட்டுமொத்த நடிகர்களின் திறமையையும் ஊதி தள்ளிய நடிகை. உலகத் தரம் வாய்ந்த ஒரே இந்திய நடிகை.ஷபனா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டில் போன்ற இந்தியாவின் சிறந்த நடிகைகளை விடவும் சிறந்த நடிகை. இந்த இருவரிடமும் மேற்கத்திய நடிகர்களின் தாக்கம் அல்லது மேற்கத்திய மேனரிசங்கள் நிறைந்திருக்கும். திறமை வாய்ந்த இயக்குநர்கள் மூலம் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியவர்கள்.

2190017089.jpg

ஆனால் மனோரமா ஒரு சுயம்பு. மிக மட்டமான இயக்குநர்களிடமும், கதாநாயகி அந்தஸ்த்தில் இல்லாதபோதும் தனக்கு வழங்கப்பட்ட குறைந்த வாய்ப்பில் நிறைவாக செய்தவர். மொழியை அவர் பயன்படுத்திய லாவகம், அவரின் உடல் மொழி முழுக்க முழுக்க சுயமான ஒரு தமிழ் அடையாளம்.  அதுபோல் கதாநாயகிகளில் ஸ்ரீதேவி. எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதிலும் கைதேர்ந்த முழுமையான நடிகை.

திறமையான கதாநாயகர்கள் கூட ஸ்ரீதேவியுடன் நடிக்கும் போது நிறைய குறைபாடுகள் உள்ளவர்களாக தெரிவார்கள். குறிப்பாக கமல்ஹாசன். ஸ்ரீதேவியின் முன் அவரின் நடிப்புத் திறமை, திக்கித் திணறுவதும் – ஸ்ரீதேவியின் நடன நளினத்தின் முன் கதாநாயக அந்தஸ்தோடு கமல் ஆடுகிற நடனம்,  ஒரு கோமாளி கூத்தைப்போல் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.

sridevi1.jpg

மூன்றாம் பிறைபடத்திற்கு ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது கிடைக்காமல், கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகர் விருது  கிடைத்தது. இது சிவாஜிக்கு  சிறந்த நடிகர் விருது தராமல், ரிக்ஷாக்காரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காகஎம்.ஜி.ஆருக்கு தேசிய விருது தந்தது போன்ற தமாசு.  

* இந்துக்களின் ஜாதி உணர்வை பற்றி சொல்கிறீர்கள். ஆனால் கிறிஸ்தவர்களிடமும் ஜாதி உணர்வு இருக்கிறதே?

த.நி.சங்கர்,சென்னை. 

ஜாதி உணர்வுமட்டுமல்ல, ஜாதி வெறியே இருக்கிறது. அவர்களின் கடவுள் தான் வேறு. மற்றப்படி அவர்கள் இந்து உணர்வோடுதான் இருக்கிறார்கள். கிறிஸ்த்தவர் கிறிஸ்த்தவரையே கல்யாணம் செய்து கொண்டாலும், ஜாதியை குறிப்பிட்டு கலப்பு திருமணம் என்கிறார்கள். ஒரு கிறிஸ்த்தவர் தன் ஜாதியை சேர்ந்த இந்துவை திருமணம் செய்து கொண்டால் அதை, கலப்புத் திருமணம் என்று அவர்கள் சொல்வதில்லை. அந்த அளவுக்கு ஜாதி அவர்களிடம் ஆழமாக பரவியிருக்கிறது.தேர்தல் நேரங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதியில், கட்சிகள் தனது வேட்பாளர்களை கிறிஸ்தவராக மட்டும் பார்த்து நிறுத்துவதில்லை. பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் என்ன ஜாதியோ அந்த ஜாதிக்காரரே வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

அதே தொகுதியில் வேற்று ஜாதியை சேர்ந்த ஒரு கிறிஸ்தவரையும், அவருக்கு எதிராக அந்த ஜாதியை சேர்ந்த இந்து வேட்பாளரையும் நிறுத்தினால், பரிதாபமாக கிறிஸ்தவ வேட்பாளர் கிறிஸ்தவர்களாலே தோற்கடிக்கப்படுகிறார்.எங்கள் ஜாதிக்குள் கிடைக்கிற சலுகைகளை கிறிஸ்தவர்களே அதிகம் பெறுகிறார்கள். அதனால் எங்கள் ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கூடாதுஎன்று சொல்கிற தலைவரை, தீவிரமாக ஆதரிக்கிறார்கள் அதே ஜாதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள். சில இந்துக்களை போலவே, இஸ்லாமியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிற கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். மாவீரன் திப்புசுல்தானை பார்ப்பனர்கள் விமர்சிப்பது போல், மிக மோசமாக விமர்சிக்கிற கிறிஸ்தவ பாதிரியார்கள் இருக்கிறார்கள்.

உலக அரசியல் பேசுகிற கிறிஸ்தவர்களில் பலர், இஸ்ரேல் -பாலஸ்தீன பிரச்சினையில் இந்து அமைப்புகளைப்போல், இஸ்ரேலையே ஆதரிக்கிறார்கள். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கொலைக்கார யூதர்களின் அறிவுத்திறனை பேசி பேசி வியக்கிறார்கள். ஆண்டவருக்கு ஆணி அடிச்சது யூதர்கள்தானே என்கிற எண்ணங்கூட அவர்களிடம் இல்லை.நாம் கிறிஸ்தவர்களிடம் கேட்டுக் கொள்வதெல்லம் இதுதான், நீங்கள் முற்போக்காளர்களாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் கிறிஸ்தவ உணர்வோடவாவது நடந்து கொள்ளுங்கள். 

 * பொருளாதாரமே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கிறது என்கிறார்களே, அதெப்படி அன்புதானே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கும்?

வி.மஞ்சுளா, சென்னை. 

அப்படி ஒரு அவல நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே மாமேதை காரல் மார்க்ஸ் அதை சொன்னார்.நம் அன்புக்குரியவர்கள் இறந்துபோனால், அவர்கள் பயன்படுத்திய தலையணை, பாய் போன்றவற்றை தூக்கி தெருவில் வீசிவிடுகிறோம். ஆனால் 24 மணிநேரமும் அவர்கள் உடலோடு ஒட்டியிருக்கிற மோதிரம், செயின் போன்றவற்றை கழட்டிக் கொள்கிறோமே எதனால்?பணமதிப்பை கழித்துவிட்டு, பயன்பாடு என்கிற அடிப்படையில் பார்த்தால்-படுக்க உட்கார, சாய்ந்து கொள்ள, ஓய்வெடுக்க, உறங்க என்று நமக்கு அனுசரணையாக இருப்பது பாயும் தலையணையும். தங்கத்தால் என்ன பயன்?ஆனால், தங்கத்திற்கு இருக்கும்  பண மதிப்புதானே, அதன் மீதான மதிப்பையும் உயர்த்தி இருக்கிறது.

ஒவ்வொரு திருமண நிகழ்ச்சிகளிலும் இந்த அன்பு அல்லோகலப் படுவதை கவனிக்கலாம். கல்யாண வீட்டுக்காரர்கள், கல்யாணத்திற்கு வந்திருக்கிற வசதி குறைந்த உறவினரை வரவேற்று பேசிக் கொண்டிருக்கும்போதே, தூரத்தில் வருகிற வசதியானவர் முகம் சிறீஷீsமீ uஜீ பில் தெரிவதும், அருகில் இருக்கிறவரின் முகம் திணீபீமீ ஷீut  ஆகி மறைவதையும் எது தீர்மானிக்கிறது? அன்பா? திருமணம் நிகழ்ச்சிக்கு போய் வந்த நடுத்தர வர்க்கத்தின் குடும்பங்களில் இப்படியான பேச்சு கண்டிப்பாக இருக்கும், “நம்மள அவ கண்ணுக்கு தெரிஞ்சதா பாத்தியா?”  

* கமல் எவ்வளவோ சிரமப்பட்டு நடிக்கிறார். ஆனால் எந்த சிரமமும் படாமல் கமல் படங்களை விட ரஜினியின் படங்களை மக்கள் விரும்புகிறார்கள்?

டி.ரமேஷ், சென்னை. 

அதற்குக் காரணம் இருக்கிறது. கமல் தனது படங்களில் தன்னுடைய ஆண்மையை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பதுபோல் காட்சிகளை வைப்பதுதான்.ஜட்டி போடுவது, ஜட்டியை கழட்டுவது போன்றவகளை வலிந்து காட்சியாக்குவது. சிட்டுக்குருவி லேகியத்திற்கான விளம்பரப்படம் மாதிரியான அவரின் உடலுறவு காட்சிகள்தான், குழந்தைகள் உட்பட குடுபம்பத்தோடு அவரின் படங்களை பார்ப்பதற்கு நடுத்தரவர்க்கத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது.நடுத்தரவர்க்கதில் குடும்பத்தோடு சினிமாவிற்கு போவதை தீர்மானிப்பவன் ஆண். அவன் இப்படிப்பட்ட காட்சிகளை தன் மனைவி பார்ப்பதைக்கூட விரும்பமாட்டான்.

கதாசிரியர் ஆர்.கே.நாரயணனிடம் நீங்கள் ஏன் உங்கள் கதைகளில் செக்ஸ் எழுதுவதில்லைஎன்று கேட்டபோது-அவர் சொன்னார், “என் கதாநாயகனும், நாயகியும் தனியறையில் இருக்கும்போது நான் அந்த அறையை விட்டு வெளியே வந்து விடுவேன்.இந்த நாகரீகம் கேமராவுக்கும் பொருந்தும். திரைப்படத்தில்,  யாரும் தொட அஞ்சுகிற காந்தி கொலை வழக்கை, மிகச் சிறந்த தொழில் நுட்பத்தோடு, துணிச்சலோடு காந்தியை கொன்றது பார்ப்பனிய இந்து அமைப்புதான். பிரிவினையின் போது காந்தி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதுதான் அந்தக் கொலைக்குக் காரணம்என்ற உண்மையை சொன்ன படம் ஹேராம்’.

கமல்ஹாசனின் இயக்கத்தில் வந்த முதல் படம் அது. இந்தியாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று என்று ஹேராமைஉறுதியாகச் சொல்லலாம்.ஆனால் அந்தப் படம் படுதோல்வி அடைந்தற்கான காரணங்களில் ஒரு முக்கிய காரணம், கதைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத உடலுறவு காட்சிகள்தான்.சாகேத்ராமன் தனது இரு மனைவிகளிடமும் எப்படி விதவிதமாக உறவு கொள்கிறார் என்பது பார்வையாளர்களுக்கு தேவையற்ற ஒன்று.kamal.jpg

கலவரம் நடந்து கொண்டிருக்கிற கல்கத்தா வீதிகளில் தப்பி, வீட்டில் தனியாக இருக்கிற தன் மனைவியை  பல மாதங்களுக்குப் பிறகு பார்க்க வருகிற சாகேத்ராமன், கலவரத்தில் இருந்து வீட்டின் கதவுக்கு வந்த  அடுத்த வினாடியே ரொமாண்டிக்கில் ஈடுபடுவது ஒரு மனநோயாகவே இருக்கிறது.நகரம் முழுக்க கலவரம் பரவி கிடக்கும் போது, கணவனின் மனது வீட்டில் தனியாக இருக்கிற மனைவியின் பாதுகாப்பு குறித்துதான் யோசிக்குமே தவிர, உடலுறவு குறித்தல்ல.

சிறந்த நடிகரும், மோசமான இயக்குரும், கமல்ஹாசனின் ரசிகருமான நடிகர் நாசர், இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியின் போது தனது நண்பர்களிடம் இப்படி சொல்லிக் கொண்டு வந்தார், “செக்ஸ் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாங்க. யாதார்த்தமா அதை காண்பிக்கிறதுல என்ன தப்பு?”மலம் கழிப்பதுக் கூட எல்லோரும் செய்யிறதுதான். அதையும் யதார்த்தமா காட்லாமே?

கமல்ஹாசன் கக்குஸ் போறத தத்ரூபமான காட்சியா வைச்சா, அதுக்கப்புறம் அவருடைய காதாநாயக அந்தஸ்து எவ்வளவு முக்குனாலும் திரும்பி வராது.ரஜினி தன் படத்துல ஸ்டைலா சிகெரட்டை போடுவாரு. ஆனா, ஸ்டைலா ஜட்டி போட மாட்டாரு. அதனால்தான் அவரு படம் பைத்தியக்காரத்தனமா இருந்தாக்கூட குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு அனைவரும் விரும்பி பாக்கிறாங்க.  

* இந்தியாவை பொறுத்தவரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது. அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் வர்க்கம், வர்க்கம் என்று பேசுகிறார்கள்?

சுந்தர் சார், திருச்சி.

 திருமணங்களை ஜாதிதான் தீர்மானிக்கிறது. ஆனால் தனக்கு வர இருக்கிற துணை தன் ஜாதிக்காரராக இருந்தால் மட்டும் போதாதது, தன்னைப் போல் வசதியான அல்லது தன்னை விட வசதியானவராக  இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்களே, அது என்ன ஜாதி உணர்வா? தன் ஜாதிப் பெண்ணாக தேடி மணம் முடித்துக் கொண்டபின் வரதட்சணை கேட்டு துன்புறுத்தகிறார்களே, அவர்கள் எல்லாம் வேறு ஜாதிக்காரர்களா? “நம்ம ஜாதியா இருந்தா போதுங்க, வரதட்சணை எல்லாம் வேணாம்என்று எந்த ஜாதிக்காரன் சொல்றான்? ஜாதி வெறியன் கூட சொல்றதில்லை.

ஜாதி விட்டு கல்யாணம் பண்ண தயாராக இருக்கிறவர்கள் கூட வர்க்கம் பேதம் கடந்து கல்யாணம் முடிக்க தயாராக இல்லை.டாக்டருக்குப் படித்திருக்கிற, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிற, நல்ல அழகான மணமகளுக்கு-நல்ல வேலையில் உள்ள மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிற வசதியான மணமகன் தேவை. ஜாதி தடையில்லை.இந்த விளம்பரங்களை நீங்க பாக்கறதில்லையா?ஜாதி மாறி கல்யாணம் முடிச்சக் கூட, கலெக்டர் கலெக்டராதான் முடிப்பாரு. இல்லைன்னா டாக்டரை முடிப்பாரு.

சுய ஜாதியில் தன் படிப்புக்கும் தன் அந்தஸ்துக்கும பொருத்தமாக பெண் கிடைக்காததால், வேறு ஜாதியில் தகுதி-திறமையானபெண்ணை கட்டிக் கொண்டு, தன் ஜாதி மக்களுக்காக பாடுபடுகிறஜாதிய உணர்வாளர்களும் இருக்கதானே செய்கிறார்கள். கிரிமனல்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் பாதுகாப்புத் தருகிற ஜாதி சங்கங்கள், தன் ஜாதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லையே. இவ்வளவு ஏன்? கொலை செஞ்ச ஜெயேந்திரனுக்கு ஆதரவா போராடுன பிராமணர் சங்கம், கொலை செய்யப்பட்ட சங்கர்ராமன் அய்யருக்கு ஆதரவா வரலையே ஏன்? அதாங்க வர்க்க பாசம்.  

* கலையம்சமே இல்லாமல் திரைப்படம் எடுத்தவர் இராம.நாராயணன். அவரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக நியமித்திருக்கிறார்களே?

எஸ்.கிருஷ்ணசாமி, விழுப்புரம். 

கலையம்சம் இல்லாமல் படம் எடுத்ததுக்கூட பரவாயில்லை. பகுத்தறிவுக்கு எதிரான மூடக்கருத்துகளை -ஏற்கனவே மூடநம்பிக்கையில் மூழ்கி இம்சைபடுகிற எளிய மக்களிடம் பரப்பி, பணம் பார்த்தவர் இராம.நாராயணன்.குரங்கு, நாய், பாம்பு இவைகளை நடிக்க வைத்தக் கொடுமையைக் கூட மன்னித்துவிடலாம்.  எஸ்.வி.சேகர் என்கிற பார்ப்பன ஜாதி வெறியரை, தனது 16 படங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்து, தமிழர்களுக்கு அவர் செய்த தீமையை மன்னிக்கவே முடியாது.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கே எதிராக இருக்கிற பார்ப்பனரல்லாத பார்ப்பனரான இராம.நாராயணனுக்கு, கலைஞர் கொடுத்திருக்கிற முக்கியத்துவம் ரொம்ப அதிகம்.    

சமூக விழிப்புணர்வு – மாத இதழ், செப்டம்பர் 2007      

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

ஜூலை 2007

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

ஏழை-பணக்கரான், உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி எல்லோரும் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க முடியாதா?
-டி. அப்துல்ரசாக், திருவள்ளூர்.

பணக்காரர்களால்தான் ஏழைகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி ஆனதே உயர் ஜாதிக்காரர்களால்தான். பணக்காரர்களின் செல்வத்தை எடுத்துதான் ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உயர் ஜாதிக்காரர்களின் ஜாதி ஆணவத்தை ஒழித்தால்தான், தாழ்ந்த ஜாதி தன்மை ஒழியும். ஜாதியும் ஒழியும்.

யாருக்கும் இழப்பு ஏற்படாமல் எல்லோருக்கும் நன்மை செய்ய, கடவுளால் கூட முடியாது.

கடவுள் புலிக்கு நன்மை செய்தால் மானை கொன்றுதான் ஆக வேண்டும். மானுக்கு நன்மை செய்தால் புலியை பட்டினி; போட்டு சாகடித்துதான் தீர வேண்டும்.

தனது கருத்தாழமிக்க திரைப்படப்பாடல்களால் கோடிக்கணக்கான தமிழர்கள் இதயங்களில் இடம் பிடித்தவர் கண்ணதாசன். அவர் பாடல்களை கேவலம் என்று சொல்லிவிட்டிர்களே?
-சுப.சீனிவாசன், காரைக்குடி.

தமிழர்களுக்கு இருக்கும் பல்வேறு மூடநம்பிக்கைகளில் கண்ணதாசன் பற்றிய மூட நம்பிக்கையும் ஒன்று. ‘கண்ணதாசனின் பாடல் வரிகள் மிகச் சிறப்பானவை’ என்று நினைத்துக் கொண்டிருப்பதும் ஒரு மூட நம்பிக்கைதான்.

சிறந்த பாடல் என்று சிலாகிக்கிற பெரும்பானமையான பாடல்களின் வரிகள் பல்லவியைத் தாண்டி பல பேருக்கு தெரியாது என்பதே உண்மை. காரணம் அந்தப் பாடலின் மெட்டுதான் அவர்களை வசீகரித்து இருக்கும். தனக்கு தானே பாடிக் கொள்கிற பலபேர், இரண்டு வரிக்கு மேல் பாடல் வரிகளை தவறவிட்டு “தன னா தன னா…” என மெட்டைதான் பாடிக் கொள்வார்கள். அந்த இனிய மெட்டை தனக்கு தெரிந்த மொழியின் மூலமாக ஞாபகம் வைத்துக் கொள்வதால் இசையப்பாளருக்கு சேர வேண்டிய பெருமை, கவிஞனுக்குப் போய் சேர்ந்தது.

இளையராஜாவின் வருகைக்குப் பிறகு அவருடைய இசைதான் மிகத் துல்லியமாக இந்த வேறுபாட்டை பிரித்துக் காட்டி மக்களின் இசை ரசனையை தனியாக அடையாளம் காட்டியது. சினிமா வரலாØறில் ஒரு நடிகனைவிடவும் மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்ற நபராக ஒரு இசையமைப்பாளர் (இளையராஜா) உருவானார். (ஆனால் ஆபாச வரிகள் மெட்டையும் தாண்டி ஆக்கிரமிக்கும் என்பது வேறு)

ஒப்பீட்டளவில் பார்த்தால் தமிழ் சினிமாவில் கருத் தாழமிக்க பாடல்கள் எழுதிய ஒரே நபர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மட்டும்தான். மெட்டுக்களை உருவிட்டு வாசித்தாலும் வலிமையோடு இருக்கும் அவருடைய வார்த்தைகள்.

“தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்று குழந்தைக்கு அவர் சொன்ன சேதியில் தெறித்த பொதுவுடமையும்,

“நான் கருங்கல்லுச் சிலையோ, காதல் எனக்கில்லையோ, வரம்பு மீறுதல் முறையோ” என்று ஒரு பெண் தன் காதல் உணர்வை, தன்னுடைய சுயமரியாதை உணர்வோடு சேர்த்து பாடுவது போல் எழுதிய ஒரே கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்தான்.

காரணம் தனக்கென்று தத்துவமும் அரசியலும் கொண்ட திரைப்படப் பாடலாசிரியர் அவர் மட்டும்தான்.

அதேபோல் கவிரூர் சுரதா, குறைந்த பாடல்கள் எழுதினாலும் இலக்கிய தரமிக்க பாடல்கள் எழுதியவர்.

ஆனால் கண்ணதாசனிடம் இருந்தது வெறும் தொழில் நேர்த்திதான். கதையின் சூழ்நிலைக்கும், மெட்டுக்கும் பொருத்தமான வரிகளை விரைவில் எழுதுகிற ஆற்றல். அதனால்தான் அவர் அதிக பாடல்களை எழுதினார்.

சில நேரங்களில் சூழலுக்குப் பொருத்தமற்ற வரிகளையும் நிறைய எழுதியிருக்கிறார். ‘நெஞ்சில் ஒர் ஆலயம்’ படத்தில், “ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா? ஒரு மனதில் ஒரு முறைதான் மலரும் உறவல்லவா?” என்று தன்னை மறுமணம் செய்து கொள்ள நோய்வாய்ப்பட்ட கணவனைப் பார்த்து மனைவி பாடுவது போல் உள்ள பாடல். ஆனால் கதையின்படி அந்தப் பெண்ணுக்கு கணவன் இரண்டாவதாக மலர்ந்த மலர். முதல் மலர் டாக்டர்.

16 வயதினிலே படத்தில், கல்வி அறிவற்ற சப்பானி, “இது வள்ளுவனின் ஏட்டில் உண்டு பரம்பரை பாட்டில் உண்டு தவறில்லை மகராணி” என்று பெரிய பண்டிதனைப் போல் பாடியிருப்பார்.

ராஜபார்வை திரைப்படத்தில், பார்வையற்ற கதாநாயகன் தன் காதலியை, “சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன. சேர்ந்த பல் வரிசையாவும் முல்லை போன்றன” என்று நெற்றிகண்ணோடு சேர்ந்து மூன்று கண்களும் தெளிவாகத் தெரிகிற சிவபெருமான் பாடுவது போல் எழுதியிருப்பார்.

எனக்கு தெரிந்து மெட்டைத் தாண்டி வலிமையான வார்த்தைகளோடு ஒரே ஒரு பாடலைத்தான் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். அது ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் ஒர் அடிமை பாடுவது போல், அமைந்த பாடல்.

“காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
வானம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல், தாய்மை, பாசம் நம்மை வெறுப்பதில்லையே”

ஒரு வேளை இந்தப் பாட்டை யாராவது மண்டபத்துல எழுதிக் கொடுத்தாங்களோ என்னவோ?

ஆண்களோடு பெண்கள் நட்பு ரீதியாக வெளியில் செல்வது, ஹோட்டலுக்குச் செல்வது என்பது சகஜமாகியிருக்கிறது. ஆண் நண்பர்கள் பெண்ணிடம் நல்ல நண்பர்களாக நடந்து கொள்கிறார்கள். இந்த கணவன் மார்களாக இருக்கிற ஆண்கள்தான் கொடுமைக்காரர்களாக இருக்கிறார்கள்?

எல்.பிரேமாவதி, சென்னை.

ஆண் நண்பர்கள் அன்பானவர்கள்தான். உங்கள் ஆண் நண்பர்களின் ‘அன்பை’ தெளிவாகப் புரிந்து கொள்ள அவர்களின் மனைவிமார்களிடம் விசாரித்துப் பாருங்கள். அன்பின் யோக்கியதை அம்பலத்திற்கு வரும். அன்பு வேறு; ஜொள்ளு வேறு. ஆண் நண்பர்களோடு ஹோட்டலுக்குச் செல்வதில் தவறில்லை. ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் ஆண்தான் பணம் தரவேண்டும் என்று அமைதியாக இல்லாமல் ஆணை முந்திக் கொண்டு பில்லுக்கு பணம் தருவதுதான், சுயமாக சம்பாதிக்கும் பெண்ணின் சுயமரியாதைக்கு அழகு, பொதுவாக ஆண்களிடம் ஓசியில் வாங்கித் தின்னுகிற பெண்களின் மேல் வாங்கித் தருகிற ஆண்களுக்கே மரியாதை இருப்பதில்லை. அவர்களுக்கு ஆண்கள் வைத்திருக்கிற பட்டப்பெயர்
‘அயிட்டம்’.

சில நேரங்களில் பெண்ணுரிமையோடு நடந்து கொள்வதில் பொருள் நஷ்டம் இருக்கலாம். ஆனால் மரியாதை கிடைக்கும். சில நேரங்களில் பெண்ணடிமைத்தனத்தோடு நடந்து கொள்வது லாபமாக கூட இருக்கலாம். ஆனால் மரியாதை கிடைக்காது.

காதல் ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு முறைதானே வரும்?
எல்.நிவேதிதா, சென்னை.

சின்ன திருத்தம். ஒரு நபரின் மீது ஒரு முறை தான் வரும்.

பார்ப்பனப் பத்திரிகைகள் பெரியார் படத்தை பாராட்டி தள்ளியிருக்கின்றனவே?

பெரியார்பித்தன், கும்பகோணம்.

பெரியாரை பாராட்டி விட்டு, பெரியார் கொள்கைகளுக்கு குழிதோண்டுகிற வேலை பார்ப்பனர்களுக்கு ஒன்றும் புதியதில்லையே. (ஒரு வேளை திரையில் வந்த பெரியார், பார்ப்பனியத்திற்கு ஆபத்தானவர் இல்லை என்று அவர்கள் உணர்ந்திருக்கலாம்)

மழலைக் கல்வி தமிழ் வழியில் இருப்பதுதானே சிறந்தது?
க.குமார், சென்னை.

ஐந்து வயதுக்குள் கல்வி என்பது மழலைத் தனத்துக்கு எதிரானது. கொடுமையை ஆங்கிலத்தில் செய்தால் என்ன? தமிழில் செய்தால் என்ன? கொடுமை கொடுமை தானே?

எல்லாவற்றிலும் போலிகள் வந்து விட்டன. அதிலும் நிஜத்தை விட நேர்த்தியான வடிவத்தில்.. போலிகளினால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. போலிகளை ஒழிக்கவே முடியாதா?
ஜான்சன், களியக்காவிளை.

போலிகளினால் எப்போதுமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நிஜங்கள் தீங்கு செய்யும் போது, போலிகள்தான் குறைந்தபட்ச பாதுகாப்பையே தருகின்றன.

‘கோகோ கோலாவில் அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்பட்டிருக்கிறது. அதை குடிப்பதினால் உடல் நலத்திற்கு தீங்கு’ என்று விஞ்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும் அந்த நிறுவனம் தன்னுடைய சக்தி வாய்ந்த விளம்பரத்தினால், ‘கோக் குடிப்பது நவீன நாகரிகத்தின் அடையாளம்’ என்று மீண்டும் மீண்டும் மக்களை குடிக்க வைக்கிறது. கோக்கில் போலி வந்தால் அது மக்களை பூச்சிக் கொல்லி மருந்திலிருந்து காப்பாற்றுகிறது.

பன்னாட்டு நிறுவனத்தின் கொள்ளையையும் குறைக்கிறது. கோக்கைப் போலவே மக்களுக்கு கெடுதலை செய்கின்ற ‘சிவாஜி’ போன்ற படங்களை மக்கள் பார்க்க ஆசைப்பட்டால், ஒரு டிக்கெட் 1000 ரூபாய் கொடுத்து பார்க்க வேண்டியிருக்கிறது. அதையே திருட்டு வீசிடியில் பார்த்தால் ஒரு குடும்பமே 50 ரூபாயில் படம் பார்த்துவிடுவார்கள். குறைந்த பட்சம் ஏவிஎம் செட்டியார்கள், ரஜினிகாந்த் இவர்களின் கூட்டுக் கொள்ளையில் இருந்து மக்களை திருட்டு விசிடி போன்ற போலிகள்தானே பாதுகாக்கிறது.

வெறிபிடித்தத் தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளுக்கு அளவே இல்லை. இவைகளைக் கொன்றால்தான் என்ன?
ம.ரமேஷ், சென்னை.

இந்தத் தொல்லை வெறிநாய்களால் அல்ல. ஜீவ காருண்ய சீலர்களால். ஜாதி இந்துக்கள், சைவ உணவு முறை பழக்கமுள்ள உயர்ஜாதிக்காரர்கள் எப்போதுமே உழைக்கும் மனிதர்களை விட விலங்குகளை மேன்மையானவைகளாக கருதுவார்கள்.

“அம்மா தாயே, சாப்பிட ஏதாவது இருந்த குடும்மா” என்று தன் வீட்டு வாசலில் பிச்சை எடுக்கிற ஒரு குழந்தையை விரட்டி விட்டு, எங்கோ இருக்கிற காக்காவை அழைத்து அதற்கு உணவு வைப்பார்கள்.

தனக்காக உழைக்கிற மனிதனை தொட்டாலே தீட்டு என்று ‘தீண்டாமையை’ கடைப்பிடிக்கிற இந்த ‘சுத்தமானவர்கள்’ பசுமாட்டின் பின்புறத்தை தொட்டுக் கண்ணில்; ஒத்திக் கொள்வார்கள். பிறகு அதிலிருந்து வழிகிற மூத்திரத்தை பிடித்து தலையில் தெளித்துக் கொண்டு, அதை ஒரு வாய் குடிக்கவும் செய்வார்கள். (மாட்டு மூத்திரத்தைக் குடிப்பவர்கள் உயர்ந்த ஜாதி. மாட்டு கறியை தின்பவர்கள் தாழ்ந்த ஜாதியாம்)

இதன் தொடர்ச்சி தான் இவர்களுக்கு வெறி நாய்கள் மற்றும் தெருநாய்கள் மீது வந்திருக்கிற பாசமும்.

எந்த மக்கள் தங்கள் உணவின் ஒரு பகுதியை கொடுத்து தெருநாய்களை அன்போடு வளர்த்தார்களோ – அந்த மக்கள்தான் அதைக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காரணம் அது அவர்களை தொல்லை செய்வதால், அவர்களைக் கடித்துக் கொல்வதால்.

ஆனால், தெரு நாய்கள் உயிர் வாழ்வதற்கு ஒரு ரொட்டியைக் கூட வாங்கி வீசாத ‘இரக்கமானவர்’கள்தான் ‘அவைகளை கொல்லக் கூடாது’ என்று ஊளையிடுகிறார்கள்.

தெருநாய்களோடு தன் வீட்டு ‘உயர்வகையான’ நாய்கள்கூட பழகி விடக் கூடாது என்று கயிறு கட்டி வீதியில் நாய் மேய்கிற இவர்கள்தான், தெருநாய்கள் மீது ‘அன்பை’ பொழிகிறார்கள்.

இந்த நாய் அபிமானிகள் சொல்லுகிற ஆலோசனை, “தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டு மீண்டும் தெருவிலேயே விட்டு விடவேண்டும்” என்பது.

தான் வளர்க்கிற அன்பு நாய்களுக்கு வயதாகி விட்டாலோ, நோய் வாய் பட்டாலோ தனக்கு தொல்லை தந்தாலோ ‘புளு கிராசில்’ கொண்டு விட்டு விட்டு புது நாய் வாங்கிக் கொள்பவர்கள் தான்.

மக்களுக்கு தொல்லை தருகிற நாய்களை மீண்டும் தெருவிலேயே விட சொல்லுகிறார்கள். தெருநாய்களையும் புளு கிராசில் விட்டால் என்ன?

கும்பலாக வீதியில் சண்டை இட்டு திரிகிற தெருநாய்களோடு வாழ்வது எவ்வளவு துன்பமயமானது, சுகாதாரக் கேடானது என்பது அவர்களுக்கு தெரிய வேண்டுமானால், வெறி பிடித்த நாய்களை கும்பலாக கொண்டு போய் அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வந்துவிடவேண்டும். அந்த நாய்கள் எழூ;காவது ஏடாகூடமான இடத்தில் பிடித்து கடித்து வைத்தால்தான் அந்த மகா ‘ஞாநி’களுக்கு புத்தி வரும்.

எவ்வளவோ நாகரீகம் வந்து விட்டது. ஆனால் இன்னும் அரசியல் கட்சி மேடைகளில் துண்டு போர்த்துவதும், அரசியல்வாதிகள் தோளில் துண்டு போட்டுக் கொள்வதுமாக இருக்கிறார்களே, இந்த அநாகரீகமான துண்டுக் கலாச்சாரம் ஒழியவே ஒழியாதா?

எஸ்.என்.சிவசைலம், சேலம்.

தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத்திற்கு எதிராக வந்தது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது. தோளில் துண்டுப் போடக்கூடாது, அப்படியே போட்டாலும் ‘உயர் ஜாதி’க்காரர்களை கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்ட வேண்டும் என்று இருந்த அநீதியை எதிர்த்து பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் கடுமையாக போராடியது.

ஒடுக்கப்பட்ட இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த – நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பெரியாரின் போர்வாளான பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார்.

இன்று கூட தோளில் துண்டு போடுகிற பழக்கம் அரசியல் கட்சிகளில் அதிகம் இருப்பது திமுகவிடம்தான். அதற்குக் காரணம் பெரியார் மூலம் ஏற்பட்ட பழக்கமே.

தோளில் துண்டு போடுகிற இந்தப் பழக்கம், திராவிட இயக்கங்களின் பழக்கம் என்பதினால்தான் பார்ப்பன பத்திரிகைகள் – அரசியல்வாதிகள் பற்றியான நகைச்சுவைகளில், கார்ட்டூன்களில் தோளில் துண்டுப் போட்ட உருவங்களையே வெளியிடுவார்கள்.

அரசியல்வாதிகள் தோளில் துண்டுப் போட்டுக் கொள்வது உங்களுக்கு எந்த வகையில் இடைஞ்சலாக இருக்கிறது? நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்?

தோளில் துண்டுப் போடுவது அநாகரிகமல்ல, சுயமரியாதை. தோளில் பூணூல் போடுவதுதான் அநாகரீகம்

பகுத்தறிவாளர்கள் ஆயிரம் வீராப்பு பேசினாலும், நட்புக்கு உதாரணம் என்றால் அது கர்ணன்-துரியோதனன் நட்புதானே. பகுத்தறிவாளர்கள் உதாரணம் காட்டுவதுக் கூட இவர்களைத்தானே?
கே.ரகுராம், கல்பாக்கம்.

செரூசோற்றுக் கடன் தீர்த்தான் கர்ணன்.

சோறு வாங்கிக் கொடுத்தான், சாராயம் வாங்கிக் கொடுத்தான் என்பதற்காக விசுவாசமாக இருப்பவனுக்குப் பெயர் நண்பனல்ல. அடியாள். அதற்கு மனிதன் அவசியமல்ல. அந்த நன்றியை நாய் கூட செய்துவிடும்.

தான் உதவி செய்தோம் என்பதற்காக உபகாரம் எதிர்பார்ப்பவன் நண்பனல்ல. எஜமான். தான் கொண்டகொள்கையை எதிர்ப்பவன், தன் உடன்பிறந்தவனாகவே இருந்தாலும், ஒருமித்தக் கருத்துக் கொண்ட தன் தோழர்களோடு இணைந்து உறுதியோடு எதிர்ப்பவனே, நண்பன் – தோழன். கொள்கை சார்ந்த நேர்மையும், அதை வெளிபடுத்துவதில் உள்ள தெளிவையும் பார்த்து ஏற்படுகிற நட்பே உறுதியானது. இனிமையானது. பார்த்த மாத்திரத்தில் பத்திக் கொள்வது காதல் அல்ல – கொள்கை சார்ந்த நட்பு மட்டுமே. அதற்கு உலக உதாரணம், மார்க்ஸ்-எங்கல்ஸ்.

மார்க்சை முதன் முதலில் சந்தித்த எங்கல்ஸ் அந்தப் பிரிவுக்குப் பிறகு, மார்க்சுக்கு முதல் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் இப்படிதான் முடிகிறது்

“அன்பு கார்ல், தங்களுடனிருந்த அந்தப் பத்து நாட்களும் நான் கொண்டிருந்த மகிழ்ச்சி, நான் அனுபவித்த அந்த மகோன்னதமான மனிதத்துவ உணர்வு இப்போது என்னிடமில்லை”

யாரையும் விட மாட்டீர்களா? எல்லாரையும் திட்டுகீறீர்களே?
சு.விநாயகம், சென்னை

தன்னைப் பற்றியோ அல்லது தனக்கு வேண்டியவர்கள் பற்றியோ விமர்சிக்கும்போது, அதை நேரடியாக கேட்க தைரியமற்றவர்களின் உளவியல் சார்ந்த கேள்வி இது. தன் விஷயத்தையே பொதுவிஷயமாக மாற்றி, தன்னையும் தனக்கு வேண்டியவர்களை விமர்சிக்கிற காரணத்தினாலேயே, தரமான ஒன்றை ‘தரமற்றது’ என்று பிரச்சாரம் செய்வதின் மூலமாக, ‘பழிவாங்கிய மனத் திருப்தி’யை அடைவதற்கான முயற்சியே இந்தக் கேள்வியின் உளவியல் பின்னணி. நான் விமர்சிக்கிற விஷயம், சரியா? தவறா? என்பது பற்றிதான் உங்கள் கேள்வி இருக்க வேண்டும். தவறு என்றால் சுட்டிக் காட்டுங்கள்.

பாராட்டிக் கொண்டிருப்பதற்கு ஆயிரம் பேர்கள் வருவார்கள். பாராட்டி அதன் மூலம் பலனும் பெறுவார்கள். சமூக பொறுப்புள்ளவன் யாரையும் தேவையற்று பாராட்டிக் கொண்டிருக்க மாட்டான். 151927ம் ஆண்டு தந்தை பெரியார் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

“பொதுவாக நமது பிரசங்கத்தினாலும், ‘குடியரசி’னால் நான் செய்து வந்த பிரச்சாரத்திலும் அரசியல் இயங்கங்களைக் கண்டித்தேன். வேதம் என்று சொல்லுபவற்றை, சாத்திரம் என்பதைக் கண்டித்தேன். பார்ப்பனியம் என்பதை கண்டித்தேன். சாதி என்பதை கண்டித்தேன். அரசாங்கம் என்பதை கண்டித்தேன். உத்தியோகம் என்பதைக் கண்டித்தேன். நீதிஸ்தலம் என்பதைக் கண்டித்தேன். தேர்தல் என்பதைக் கண்டித்தேன். கல்வி என்பதைக் கண்டித்தேன். ஸ்ரீமான்கள் கல்யாண சுந்தரம் முதலியார், வரதராஜூலு நாயுடு, ராஜகோபாலாச் சாரியார் முதலிய ஒரே துறையில் வேலை செய்து வந்த நண்பர்களைக் கண்டித்தேன். இன்னும் என்னெனவற்றையோ, யார் யாரையோ கண்டித்தேன். கோபம் வரும்படி வைதும் இருக்கிறேன். எதைக் கண்டித்திருக்கிறேன்? எதைக் கண்டிக்கவில்லை? என்பது எனக்கு ஞாபகத்திற்கு வர மாட்டேன் என்கிறது. இன்னமும் ஏதாவது எழுதலாம் என்று பேனாவை எடுத்தாலும், பேசலாம் என்று வாயைத் திறந்தாலும், கண்டிக்கவும், வையவும், துக்கப்படவுமான நிலைமை ஏற்படுகின்றதே ஒழிய, வேறில்லை. கண்டிக்கத்தகாத தியாகமோ, திட்டமோ, அபிப்ராயமோ என் கண்களுக்கு படமாட்டேன் என்கிறது.”

உங்கள் கேள்வி பதில் பகுதியில் வெவ்வேறு கேள்விகளுக்கான பதில்களின் போது, சிவாஜியை சிறந்த நடிகர் என்று இரண்டு முறை குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் அவர் நடிப்பு மிகைப்படுத்தப்பட்ட நடிப்பாகவே இருந்தது. மிகைப்படுத்தப்பட்டது என்பதே யதார்த்தத்திற்கு எதிரானது. யதார்த்தத்திற்கு எதிரானது எப்படி சிறப்பானதாக இருக்கும்?
– டி. சிவராமன், நன்னிலம்.

அன்னையின் ஆணை, திரிசூலம், லாரி டிரைவர் ராஜாகண்ணு போன்ற பல திரைப்படங்கள் அவருடைய மிகைப்படுத்தப்பட்ட நடிப்பால் பார்வையாளர்களை துன்புறுத்தியது என்பது உண்மைதான். இவைகளை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு சிவாஜியை ஒட்டு மொத்தமாக திறமையற்றவராக நிராகரிப்பது, தந்திரமான மதிப்பீடு.

தமிழின் மிகச் சிறந்தப் பொழுதுபோக்கு படமான ‘தில்லான மோகனாம்பாளில்’ சிவாஜி கணேசனின் ‘அண்டர் பிளே’ அவரின் நடிப்புத் திறமைக்கு ஒரு சான்று.

‘உத்தம புத்திரன்’ திரைப்படத்தில், ‘யாரடி நீ மோகினி’ பாடலில் சிவாஜியின் வேகமான மிக நேர்த்தியான அசைவுகள் மிக மிக நவீன பாணியிலான அழகு. இப்படி நிறைய சொல்லலாம்.

கலைவடிவங்களில் யதார்த்தம்தான் சிறப்பானது என்பதில்லை. மிகைப்படுத்தப்பட்டது கூட அழகியலோடு இருந்தால் சிறப்பாக இருக்கும். உலகத்தையே தன் வசப்படுத்தி வைத்திருந்த சாப்ளின் நடிப்பு யதார்த்தமானது அல்ல. ‘ஒரு வினாடிக்கு 24 பிரேம்ஸ்’ என்கிற தொழில்; நுட்பம் வளராத காலத்தில் வந்த அவரது திரைப்படங்கள் யதார்த்தத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத வேகம் கூடிய காட்சிகளாகவே இருக்கும். (தண்டி யாத்திரை பற்றியான டாக்குமெண்டரி படத்தில், காந்தி ஓட்டப்பந்தய வீரனைப் போல் துள்ளிக் குதித்து ஓடுவதற்கும் அந்த தொழில் நுட்பக் குறைபாடே காரணம்.) கண், காது, வாய், முகம், கை என்று தனியாக குளோசப்பில் காட்டுவது யதார்த்தமில்லை.

சில நேரங்களில் யதார்த்தத்தை புரிய வைப்பதற்குக்கூட மிகைப்படுத்தல் தேவையான ஒன்றாகத்தான் இருக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சிவாஜியின் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பினால்தான் இன்று வரை பேசப்படுகிறது. கம்பீரமான, மிடுக்கான சிவாஜின் நடிப்பினாலும், உச்சரிப்பினாலும்தான் அந்தப் படத்தின் வசனங்களில் தீப்பொறி பறந்தது. அதனால்தான் மாவீரன் கட்டபொம்மனை மக்கள் நினைவில் வைக்க முடிந்தது.

கொஞ்சம் இப்படிக் கற்பனை செய்து பாருங்கள், அந்தப் படத்தின் வசனங்களை தோளை குலுக்கி மிக அமைதியாக, யதார்த்த பாணியில் இப்படி பேசியிருந்தால்்

“இல்லிங்க, ஒத்துக்க முடியாதுங்க. மழை பெய்யுது, விவசாயம் நடக்குது. அப்புறம் நான் எதுக்குங்க உங்களுக்கு வரி குடுக்கணும். நீங்க யாருங்க? உங்களுக்கும் எங்களுக்கும் என்னங்க சம்பந்தம்? சாரி, முடியாதுங்க?”

கட்டபொம்மன் படம்; இன்னும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்றால், “ஏமிரா? எவருரா நூவு? தொங்கனா கொடுக்கா” இப்படித்தான் வசனம் இருந்திருக்க வேண்டும்.

முதலாளித்துவம் மிக மோசமானது சொல்கிறீர்கள். ஆனால் முதலாளித்துவ நாடுகள்தான் வறுமையில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடிப்படை உணவு வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி போன்றவற்றை செய்கின்றன. இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மருத்துவ வசதி, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் இவற்றிற்கெல்லாம் கோடிக்கணக்காக பணம் தருகிறார்கள். அப்புறம் எப்படி முதலாளித்துவம் மோசமானதாக இருக்கும்?
– ஜெனிபர் வில்சன், நாகர்கோவில்.

ஆப்பிரிக்க நாடுகள் அதோ கதிக்கு ஆனதிற்குக் காரணமே, முதலாளித்துவ நாடுகள்தான். உலகிற்கு மிக அதிகமாக தங்கத்தை தருகிற தென்ஆப்பிரிக்காவை சூறையாடின முதலாளித்துவ நாடுகள். தங்கத்தின் மீதும் பகட்டான வாழ்க்கையின் மீதும் விருப்பமற்று இயற்கையோடு இணைந்து வாழ்ந்த அப்பாவிகளான அந்த ஆப்ரிக்க நாட்டு மக்களை, அடிமைகளாக நடத்தியது வெள்ளைக்கார முதலாளித்துவ நாடுகள். தனது திருட்டுத்தனத்தை மறைத்துக் கொள்வதற்கும், அதை தொடர்ந்து செய்வதற்கும் எப்போதுமே ‘தர்ம பிரபு’ வேடத்தையே கையாள்வார்கள் கொள்ளைக் கூட்டத்தார்.

கள்ளச்சாராயம் விற்று சம்பாதித்த பணத்திலும், கல்லூரிகள் கட்டி கொள்ளையடித்தப் பணத்திலும் இன்னும் ஊரை ஏமாற்றி சேர்த்த சொத்திலும் கால் துளியை எடுத்து கோயில் திருவிழா, ஏழைகளுக்கு இலவச திருமணங்கள், ஊனமுற்றவர்களுக்கு சைக்கிள் ரிக்ஷா என்று வாரி வழங்குபவர்கள் எப்படி கருணை உள்ள தொழில் அதிபர்களாக பார்க்கப்படுகிறார்களோ, அதுபோல்தான் முதலாளித்துவ நாடுகளும் தங்களை காட்டிக் கொள்கின்றன.

முதலாளித்துவத்தின் இந்த மோசடியை 150 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, தங்களது கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் அம்பலப்படுத்திருயிருக்கிறார்கள் மார்க்சும் எங்கல்சும்.

முதலாளித்துவ சோசலிசம் என்று தலைப்பிட்டு இப்படி ஆரம்பித்திருக்கிறார்கள்;

“முதலாளித்துவ வர்க்கத்தில் ஒரு பகுதி, முதலாளித்துவ சமுதாயம் தொடர்ந்து நிலவும்படி உறுதி செய்து கொள்ளும் பொருட்டு சமூகக் குறைபாடுகளை அகற்ற விரும்புகிறது.

பொருளியலாளர்களும், கொடை வள்ளல்களும், மனிதாபிமானிகளும், உழைப்பாளி மக்களுடைய நிலைமையை மேம்படுத்துவோரும், தருமப் பணித் துறையாளரும், ஜீவகாருண்ய சழூகத்தாரும், மதுக் குறைப்பு வீரர்களும் இன்னும் எல்லாவிதமான துக்கடாச் சீர்திருத்தக்காரர்களும் இந்தப் பகுதியை சேர்ந்தவர்களே.” இப்படிச் சொல்லி கொண்டே வந்து இறுதியாய் முதலாளிகள் தங்கள் வாழ்க்கையை தொழிலாளர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள், என்று கூட சொல்வார்கள் என்கிற அர்த்தப்படும்படி இப்படிச் சொல்கிறார்கள், ‘முதலாளித்துவ சோக்ஷலிசத்தைச் சுருக்கமாய் ஒரே வாக்கியத்தில் சொல்லிவிடலாம்் “முதலாளி முதலாளியாய் இருப்பது, தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே.”

Posted in கேள்வி - பதில்கள் | பின்னூட்டமொன்றை இடுக

மே 2007

தன் மகள் கனிமொழிக்காக கருணாநிதி சட்டத்தை வளைத்து சென்னை சங்கமம் நடத்தியதாக ஜெயா டிவியில் சோவும் ஞாநியும் குற்றம் சாட்டியுள்ளார்களே?

ச.சொர்ணமுகி, கடலூர்.

“நான் நாத்திகன். எந்தக் கோயிலும் மக்களுக்கு தேவையில்லாதது. அதனால் வாங்க போய் மசூதியை இடிக்கலாம்’ என்று ஆர். எஸ்.எஸ்காரன் கூட சேர்ந்துக் கிட்டு மசூதியை இடிக்க முடியுமா? அப்படி இடிக்கிறவன் உண்மையிலேயே நாத்திகனா இருக்க முடியுமா?

அது போல் ஊழலை எதிர்க்கிறவங்க, ஜெயலலிதா கூட சேர்ந்துக்கிட்டு ஊழலை எதிர்க்கிறதா சொன்னா அவங்க யோக்கியதை எப்படிப் பட்டது, அப்படிங்கிறதை சொல்லவும் வேண்டுமா? இந்த ‘நேர்மை’யாளர்களான ஞாநியும், சோவும் தர்மபுரியில் பெண்களை எரித்துக் கொன்ற வழக்கில் தண்டனை அடைஞ்ச அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது இவர்களின் யோக்கியதைக்கான இன்னொரு சாட்சி.

8 மேற்கு வங்க அரசோடு ஒப்பிடும் போது தமிழக அரசு எவ்வளவோ பரவாயில்லை?

என்.சுரேஷ்குமார், ஈரோடு.

மேற்கு வங்க அரசோடு ஒப்பிட்டால் இந்தியாவின் எந்த மாநில அரசும் ஏன் கேரளா கூட இவ்வளவு மோசம் இல்லை. புத்ததேவ் பட்டாச்சாரியா, குஜராத் மோடியோடு போட்டி போடுறார்.

ஓட்டுக் கட்சிகளில் பி.ஜே.பிக்கு மாற்றாக சி.பி.எம். மை கருத்தளவில் சில நாட்கள் ஆதரிச்சிருக்கேன். அதை இப்ப நினைச்சா என் உடம்பெல்லாம் கூசுது.

‘தமிழ்நாடு பரவாயில்லை’ன்னு சொல்லியிருக்கீங்க… மேற்கு வங்காளத்திற்கு டாடா. தமிழ்நாட்டுக்கு ரிலையன்ஸ். விவசாயிகள், சிறு வியாபாரிகள் இவர்களுக்கு எதிரா ரிலையன்ஸ் நிறுவனவம் தமிழ்நாட்டில் வர்த்தக வன்முறையை துவங்கியிருக்கு.

தமிழக அரசு தனக்கு ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு ஆதரவா உழவர் சந்தையை நடத்துமா? இல்லை அம்பானிக்கு ஆதரவா ஆயுதம் தூக்குமா? பொருத்திருந்து பாருங்க.

வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியார் படத்துக்கு இளையராஜா இசைக்க மறுத்தாராமே?

க.டென்னீஷ், பெரியபாளையம்.

“நான் மறுக்கவில்லை” என்று இளையராஜா மறுத்திருக்கிறார். அது இருக்கட்டும் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை ஆதரிப்பவராக, பார்ப்பன எதிர்ப்பாளராக இளையராஜா இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இளையராஜா ஒரு கலைஞர். மக்களுக்கும் அவருக்குமான தொடர்பு அவருடைய வார்த்தைகளின் மூலமாக இல்லை. அவரின் இசையின் மூலமாகத்தான். இளையராஜாவின் இசையை கொண்டாடுகிற மக்கள், அவருடைய ஆன்மீக வார்த்தைகளை சட்டை செய்வதில்லை. அவர் இசையை கொண்டாடாத அல்லது பொருட்படுத்தாத அறிஞர்கள் தான் அவர் வார்த்தைகளை பிடித்து தொங்குகிறார்கள். அடுத்தவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்வதை விட, இவர்களுக்கு என்ன தெரியுமோ அதன் மூலமாகவே அடுத்தவர்களை பார்ப்பது, என்கிற பழக்கமே இளையராஜா பற்றியான எதிர்பார்ப்பான மதிப்பீடுகளுக்குக் காரணம். 99 சதவீதம் அவர் நம்மோடு இசை மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு சதவீதமே அவரின் வார்த்தைகள் நம்மை சேர்ந்திருக்கும். 99 சதவீதத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதவர்கள், ஒரு சதவீதத்தை வைத்துக் கொண்டு அதையே 100 சதவீதம் விமர்சிக்கிறார்கள். “இதுதாண்டா சாக்கு’ன்னு அவரின் பிரமிக்க வைக்கிற இசை அறிவையும் சேர்த்து இளையராஜாவை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.

தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் செய்த கலகம் எத்தனைப் பேருக்கு தெரியும்?

சாருமதி ராகம் நாட்டுபுறப் பாடலில் இருந்து களவாடியது என்பதை “பாடறியேன்… படிப்பறியேன்…’ என்ற பாடலில் சுரங்களோடு பாடி நிரூபித்ததை எத்தனை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தப் பாடலை “மரி மரி நின்னே..’ என்று சாருமதி ராகத்தில் அமைந்த ஒரு கீர்த்தனையோடு முடித்திருப்பார் ராஜா. சாருமதி நாட்டுப்புறப் பாடலில் இருந்து திருடியது தான் என்பதை சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்திருப்பார். அந்தப் பாடலின் இன்னொரு அதிரடி சிறப்பு என்ன தெரியுமா? அந்த சாருமதி ராகம் இளையராஜா உருவாக்கியது. “மரி மரி நின்னே’ என்கிற வரி காம்போதி ராகத்தில் தியாகய்யர் எழுதியது. அதை இளையராஜா தனது அபாரமான பிரமிக்க, வைக்கிற இசை ஆற்றலால் தான் உருவாக்கிய சாருமதி ராகத்தில் இட்டு நிரப்பினார். உண்மையில் தியாகய்யர் சமாதி அடைந்தது அன்று தான்.

கர்நாடக சங்கீதத்தின் புனிதத்திற்கு இளையராஜா அடித்த சாவுமணி அது. இளையராஜாவின் இந்தச் செயல், தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு வார்த்தைகளை விடவும் படு பயங்கரமானது.

அந்தப் பாடலுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஒரு மதிப்பும், திரை இசை மீது ஒரு மரியாதையையும், கர்நாடக இசை குறித்த ஒரு கலக்கமும் உருவானது அவாளுக்கு. “அதெப்படி பார்ப்பன உணர்வுள்ள பாலசந்தர் படத்தில் இதை செய்ய இளையராஜாவால் முடிந்தது?’ பார்ப்பன எதிர்பாளர் என்கிற உணர்வோ அப்படி ஒரு நிலையிலோ இருந்து அதை செய்யவில்லை இளையராஜா. “இசை ரீதியாக இது சரியாகத்தானே இருக்கிறது தப்பென்றால் நிரூபி’ என்கிற தனது ஈடு இணையற்ற இசையறிவு தந்த செருக்கால் அதை செய்து முடித்தார் இசைஞானி.

இளையராஜா உருவாக்கிய ஒரு மெட்டை மாற்றுகிற தைரியம் இதுவரை எந்த இயக்குனருக்கும் வந்ததில்லை. தமிழர்களின் இனிமை அவர்.

நிறைய சர்ச்சையாகியிருக்கிறதே, நீதிபதிகளுக்கு என்ன ஆயிற்று?

வி.பாண்டியன், கோவில்பட்டி.

ஒரு சிறந்த நீதிபதி, சட்டத்தின்படி மட்டும் இயங்க மாட்டார். ஏனென்றால் சில நேரங்களில் சட்டத்தின் படி சரியாக இருப்பது நியாயத்தின் படி , நீதியின் படி தவறாக இருக்கும். சட்டத்தின் படி, மட்டும் இயங்குபவர் தீர்ப்பு வழங்குபவராக மட்டும் தான் இருப்பார். நீதி வழங்குபவராக இருக்க மாட்டார். சட்டத்தின் துணையோடு நியாயப்படி, நீதியின் படி பரிவோடு, துணிவோடு தீர்ப்பு வழங்குபவருக்குப் பெயர் தான் நீதிபதி. சுருங்கச் சொன்னால் வி.ஆர். கிருஷ்ணய்யர் மாதிரி. “ரயில்வேயில் பதவி உயர்வுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது’ என்று தொடுக்கப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக மரியாதைக்குரிய கிருஷ்ணய்யர் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. ஓய்வு பெற்ற பிறகும் 90 வயதைத் தாண்டி நீதிக்காக ஓய்வில்லாமல் இன்னும் போராடிக் கொண்டு தான் இருக்கிறார் இந்த நீதிமான்.

பெ.சு.மணி, திருப்பூர் கிருஷ்ணன் போன்ற ஆய்வாளர்கள் பாரதியை பார்ப்பனராகப் பார்க்க முடியாது. அவர் சொந்த ஜாதியையே எதிர்த்தவர். அவரைப் போய்…?’ என்று உங்கள் ‘பாரதி’ய ஜனதா பார்ட்டி’ நூலை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்களே?

சு. தமிழ்ச்செல்வி, சென்னை.

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னபோது, “கல் தோன்றா, மண் தோன்றா முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. அதைப்போய் காட்டுமிராண்டி மொழி என்று சொல்கிறீர்களே?” என்று பெரியாரிடம் கேட்டார்களாம். அதற்கு பெரியார், ” நான் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கும் இதே தான் காரணம்” என்றாராம். அதுபோல் பாரதியை நாம் கடுமையாக விமர்சித்ததற்கு இப்படி பதட்டப்படுகிற இந்த திருப்பூர் கிருஷ்ணனும், பெ.சு.மணியுமே ஒரு வலுவான சாட்சிதான், பாரதி பார்ப்பன உணர்வாளர் என்பதற்கு.

பெரியாரும் திராவிட இயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்களே? உண்மையா?

க.சுரேசு, கயத்தாறு.

பொய். பெரியார் ஒருவர் தான் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபட்ட தலைவர். தமிழ் அறிவு என்பது வேறு. தமிழ் உணர்வு என்பது வேறு. தமிழ் உணர்வோடு இருக்கிறவர்கள் தமிழ் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் பிழையோடு தமிழை பயன்படுத்துகிறவர்களாக இருந்தாலும் தவறில்லை. அதேபோல தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருந்ததும் இல்லை.

திரு.வி.க தமிழ் அறிஞர் தான். ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் நவசக்தி, தினசரி என்கிற சமஸ்கிருத பெயர்கள்.

பெரியார் தமிழறிஞர் இல்லை. ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் ‘விடுதலை, குடியரசு, உண்மை’ என்கிற தனித்தமிழ் பெயர்கள்.

1938ல் தமிழ் மீது இந்தி திணிப்பு நடந்த போது, அதை எதிர்க்க வேண்டும் என்கிற சொரணையற்று இருந்தார்கள் தமிழறிஞர்கள். மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி, அவர்களை இழுத்து வந்து இந்தி எதிர்ப்பில் இறக்கியது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம்.

மறைமலையடிகள் போன்றவர்களுக்கு நிறைய தமிழ் அறிவு இருந்தாலும் அவர்களின் உணர்வு சைவ சமயத்தின் மீதுதான் இருந்தது. பெரியார் சைவ சமயத்தை கடுமையாக எதிர்த்த போது, “ராமசாமி நாயக்கர் வைணவ குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் அவர் சைவ சமயத்தை சாடுகிறார்” என உளறியவர் தான் மறைமலையடிகள், பெரியாரால் சைவ சமயத்திற்கு தீங்கு என்றவுடன் இயல்பாக பெரியார் மீது பொங்கி எழுந்த மறைமலையடிகள், தமிழுக்கு ஒரு தீங்கு வரும் போது, பெரியார் வந்து பிடித்து இழுக்கும் வரை பொங்கவில்லை.

புலவர்கள், தமிழறிஞர்கள் தமிழால் வளர்த்தது தமிழை அல்ல. சைவ, வைணவ சமயத்தைத்தான். அதனால் தான் தலைவர் பெரியார், தமிழை மதத்திலிருந்து விடுதலை செய்யப்பாடுபட்டார். அந்த அக்கறையின் பொருட்டே தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.

‘நமஸ்காரம்’ என்கிற சமஸ்கிருதத்தையும், “கும்புடுறேன் சாமி’ என்கிற அடிமை தமிழையும் ஒழித்து “வணக்கம்’ என்கிற சுயமரியாதை மிக்க சொல்லை அறிமுகப்படுத்தியது திராவிட இயக்கம் தான். இந்து மத அடையாளம் கொண்ட சமஸ்கிருத பெயர்களை ஒழித்து மிகப் பெருவாரியான உழைக்கும் மக்களுக்கு மத சார்பற்ற தனித்தமிழ் பெயர்களை வைத்தது தமிழறிஞர்கள் அல்ல. திராவிட இயக்கம் தான்.

அதிமுக துவக்கத்திற்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியதும், பின்னாட்களில் மாமி பொறுப்புக்கு வந்து பல குழந்தைகளுக்கு சமஸ்கிருத சாமி பெயர்களை வைத்ததும் உலகறிந்ததே. திராவிட இயக்கத்தை குறை சொல்லிக் கொண்டு தனித்தமிழ் பேசுகிற அறிஞர்கள், தலைவர்கள் தங்கள் பிள்øளகளுக்கு சமஸ்கிருத பெயர் தான் வைத்திருக்கிறார்கள் என்பதே அவர்களின் தமிழ் உணர்வுக்கு சாட்சி. (கி.ஆ.பெ.விஸ்வநாதம் பரம்பரையில் இப்போது ஒரு தமிழ் பெயர் கூட இல்லை. இஸ்லாமியத் தமிழரான மணவை முஸ்தபா தன் மகன், மகள், பேரக் குழந்தைகள் வரை தமிழ் பெயர்கள் வைத்திருக்கிறார்.)

ஆக, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழை வளர்த்து அதை வாழ வைத்துக் கொண்டிருப்பது நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் அல்ல. மொழியை கொச்சையாக பயன்படுத்துகிற தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் தமிழ் மக்களே. (பெரியாரும் உழைக்கும் மக்களைப் போல்தான் தமிழைப் பயன்படுத்தினார்.) சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை அறிஞர்கள் நிறைய இருந்தும் பேசுவதற்கு ஆள் இல்லாததால் தான், அந்த மொழி செத்துப் போனது.

இந்தியாவின் மிக சிறந்த அறிவு ஜீவி என்று நீங்கள் யாரை சொல்வீர்கள்?

நா.சுந்தரன்,கோவை.

டாக்டர் அம்பேத்கரை. இரண்டாயிரம் ஆண்டுகளில் இன்றுவரை இப்படி ஒரு அறிவாளியை இந்தியா கண்டதில்லை. அவரின் பார்ப்பன எதிர்ப்பு. இந்து மத எதிர்ப்பு இவைகளுக்காக மட்டும் சொல்லவில்லை. விஷயங்களை அவர் அலசி ஆராய்கிற முறை, அந்த தர்க்கம் அலாதியானது. உலகத் தரம் வாய்ந்தது. விவாதங்களில் எதிரிகளை மிகச் சரியாக கணித்து, மிகச் சிறப்பான தயாரிப்புகளோடு லாவகமான வார்த்தைகளால் அவர்களை தகர்த்தெறிகிற அம்பேத்கரின் முறை அழகோ அழகு.

பார்ப்பனப் பெண்கள் உட்பட இந்தியப் பெண்களுக்கு இன்று இந்துச் சட்டத் திருத்தத்தின் மூலம் கிடைத்திருக்கின்ற குறைந்தபட்ச பாதுகாப்பே அம்பேத்கர் போராடி பெற்று தந்தது தான்.

பெண்களுக்கான சொத்துரிமை, விவாகரத்து, ஜீவனாம்சம், ஒரு தார மணம், வன்கொடுமைகளுக்குத் தண்டனை இவைகளை சட்டமாக்க அவர் பட்ட சிரமமும், அவமானமும் அதிகம். அந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்ட பார்ப்பனர்கள், பண்ணையார்கள், பிரபுக்கள், ராஜாக்களிடையே அம்பேத்கர் பாய்ந்தும், பதுங்கியும் நடத்திய விவாதம் ஒரு ராஜ தந்திரம் தான். (நம்ம ஊர்ல இருந்து போன பட்டாபி சீதாராமய்யர், ஒ.வி.அளகேசன், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் போன்ற ஜாதி வெறி பிடித்த, பெண்களுக்கு எதிரான கருத்துக் கொண்ட லூசுகளும் அதில் உள்ளடக்கம்.)

அதேபோல் வட்டமேசை மாநாட்டில் அவர் தனிநபராக இருக்க, காந்தி உட்பட எதிரிகளை அம்பேத்கர் தன் வாதங்களால் தூக்கிப் போட்டு பந்தாடிய முறையை, படிக்க படிக்க பரவசமூட்டும். அது ஆயிரம் ஆண்டு கோபம். விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்து நின்றானாமே சிவன், அதை விட உயரம், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் விஸ்வரூபம்.

மத நல்லிணக்கம் பேசுகிறவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் தான். நாஸ்திகர்கள் கூட இந்துகளில் மட்டும் தான் இருக்கிறார்கள். நாஸ்திகம் பேசுகிற பல முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தீவிரமான மத நம்பிக்கையாளராகத்தான் இருக்கிறார்கள். இந்துக்களின் ஒற்றுமையை குலைத்து விட்டு அவுங்க மட்டும் ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறார்களே?

வி. சௌமியா, காஞ்சிபுரம்.

“இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம்” என்று சொல்கிறார்கள். நாஸ்திகர்களும் அப்படி சொல்கிறார்கள். அப்படி சொல்வது தவறு. அது முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் இந்தியர்களாகவே கணக்கில் வைத்துக் கொள்ளாமல் சொல்லப்படுகிற வாக்கியம். ‘இந்துக்களின் இருபெரும் இதிகாசங்கள்’ என்று தான் அவைகளைச் சொல்ல வேண்டும். அது தான் சரி.

அந்த இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் பாரதப் போர் வருகிறதல்லவா, அது என்ன பாண்டவருக்கும் பாகிஸ்தான்காரர்களுக்குமா நடந்தது? பங்காளித் தகராறு. அப்பவே இப்படி இருக்க, அப்புறம் இப்ப வந்து நீங்க இந்து ஒற்றுமையின்மைக்காக இஸ்லாமியரை குறை சொல்றது அநியாயம்.

இந்து மத வெறியர்கள் வேண்டுமென்றே இஸ்லாமியர்களை குறி வைத்துக் தாக்குவதால், இஸ்லாமிய ஒற்றுமை என்பது கட்டாயத் தேவையாய் இருக்கிறது. இஸ்லாமியர்கள் நெருங்கிப் பழக வந்தாலும் அவர்களை சுத்தம் அற்றவர்களாக, மட்டமானவர்களாக பார்க்கிற பழக்கம் ஜாதி இந்துக்களிடையே இருக்கிறது. அந்த சுயமரியாதை உணர்வின் பொருட்டே இஸ்லாமியர்களோடு மட்டும் பழக வேண்டிய அவசியம் இஸ்லாமியர்களுக்கு நேருகிறது. மற்றப்படி இஸ்லாமியர் என்பதற்காகவே ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு, மிகவும் திட்டமிட்டது. சன்னி, ஷியா முஸ்லிம்களிடையே நடக்கிற சண்டைகள் மதக்கலவரம் போல் தான் நடக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையின்மையினாலேயே ஈராக்கை அழித்து சதாமை தூக்கிலிட்டது அமெரிக்கா, இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா, மெதினா சவுதி அரேபியாவில் தான் இருக்கிறது. அந்த சவுதி அரேபியாதான் இஸ்லாமிய நாடுகளை அமெரிக்காவிற்குக் காட்டிக் கொடுக்கும் கருங்காலி வேலையைச் செய்கிறது.

மற்றப்படி நாஸ்திகர்களாக நடிப்பவர்கள் இந்துக்களிலும் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உணர்வை ஜாதி ரீதியாக வெளிப்படுத்துகிறார்கள். இந்து உணர்வு என்பது ஜாதி உணர்வுதானே. கடவுள் மறுப்பை, ஜாதி மறுப்பை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளாமையே. சில நேரங்களில் இந்தப் போலி நாஸ்திகர்களால் மதக் கலவரம் கூட வர வாய்ப்பிருக்கிறது.

ஜெயேந்திரரையே கைது செய்தவர் ஜெயலலிதா? அவரைப் போய் பார்ப்பன உணர்வாளர் என்கிறீர்களே (கடந்த இதழில்)

ஆர்.கணேசன், திருநெல்வேலி.

அது சரி. ஜெயேந்திரன், சங்கர்ராமன்னு ஒருத்தரை போட்டுத் தள்ளினாரே, அவர் என்ன பார்ப்பன எதிர்ப்பாளரா? அவரும் அய்யிருதாங்க. அப்புறம் ஏன் இவுரு அவர போட்டாரு. அது மாதிரிதான் ஜெயலலிதா ஜெயேந்திரனை கைது பண்ணதும்.

விசிஷ்டாத் துவைதத்தைப் பரப்பிய ராமானுஜர், தன் இளமை காலத்தில் யாதவப் பிரகாசர் என்பவரிடம் வேதம் படிக்க சேர்ந்திருக்கிறார். “கப்யாசம்’ என்ற வார்த்தையை “கபிஆஸம்’ என்று அத்வைத முறைப்படி பிரித்து விளக்கம் சொல்லியிருக்கிறார் பிரகாசர். அதற்கு “குரங்கின் ஆசன வழி’ என்று அர்த்தமாம். குருவின் இந்த விளக்கத்தால் மனம் வருந்திய ராமானுஜர், கப்யாசம் என்ற வார்த்தையை “கம்பிபதிஇதிஆஸ’ எனப் பிரித்து அதற்கு “சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு மலர்ந்த செந்தாமரையைப் போன்ற கண்களுடைய திருமகள் நாதன் என்றும் விளக்கம் சொல்லியிருக்கிறார். இந்த விளக்கத்தால் அவமானப்பட்ட யாதவ பிரகாசர், ராமானுஜரை கட்டம் கட்டினார்.

தன் வேத அறிவால் பிரகாசரை ஓரங்கட்டி, காஞ்சியை ஆண்ட சிற்றரசனிடம் செல்வாக்கு பெற ஆரம்பித்தார் ராமானுஜர். ‘இனி பொறுப்பதில்லை’ என்று ராமானுஜருக்கு நாள் குறித்தார் யாதவ பிரகாசர்.

தன் சீடர்களோடு ராமானுஜரை ‘தீர்த்த மாடிவர’ கங்கைக்கு அழைத்துச் சென்று சீடர்களின் உதவியோடு ராமானுஜரை கங்கையில் அமுக்கி கொல்வது என்று திட்டம். கொலைத் திட்டம் ராமானுஜருக்கும் தெரியவர, ராமானுஜர் எஸ்கேப்.

யாதவ பிரகாசரும் அய்யங்கார், ராமானுஜரும் அய்யங்கார். அப்புறம் இவரு ஏங்க அவரை போட்டுத்தள்ள பிளான் போட்டாரு.

அதிகாரம் மற்றும் சொத்துக்கான சண்டை அண்ணன் தம்பிக்குள்ளேயே நடக்கும் போது, ஜாதிக்குள்ளேயே நடக்கிறதாங்க அதிசயம். சகோதரர் களுக்குள்ளேயே சண்டைப் போட்டுக்கறதனாலே அவுங்களுக்கு ஜாதி பாசம் இல்லைன்னு சொல்ல முடியுமா?

ஜெயேந்திரன் கைதின் போது ஜெயலலிதாவை கண்டித்து மாமிகள் உட்பட பிராமண சங்கம் உண்ணாவிரதம் இருந்தது. ஆனா தேர்தல் வந்த போது “அதிமுக விற்குத்தான் ஓட்டு போடணு’ம்ன்னு பிராமணர் சங்கம் தீர்மானம் போட்டுது.

‘நம்ம’ ஞாநி கூட ஜெயேந்திரனை அம்பலப்படுத்தி “தீம்தரிகிட’ இதழில் கடுமையா எழுதினாரு. ஆனால் ஆனந்த விகடன்ல ஜெயேந்திரனைப் பற்றி ஒரு கட்டுரை கூட எழுதல. சரி அது அவர் சக்திக்கு மீறின விஷயம். அதனால முடியலைன்னே, வைச்சிப்போம். ஜெயேந்திரனை தீவிரமா ஆதரிச்சி ஆனந்த விகடன் எழுதியதை கண்டித்து தனது தீம்தரிகிட இதழில் ஒரு கட்டுரை கூட எழுதல. தீம்தரிகிட இதழில் எழுதுவதையும் ஆனந்தவிகடன் கட்டுப்படுத்துமா என்ன? அதுக்குப் பேருதாங்க நெட் ஒர்க் பிசி.

சாய்பாபா கலைஞரை தேடி வந்து நேரில் சந்தித்திருக்கிறார். இது பெரியாருக்கும் திராவிட இயக்கத்திற்கும் கிடைத்த வெற்றி தானே?

திராவிட சுடர், சேலம்.

இந்த வாக்கியம் கலைஞரின் புகழ் பாடுவதற்காக தி.மு.க அல்லாத திராவிட இயக்க அறிஞர்கள் மற்றும் தமிழறிஞர்களால் சொல்லப்படுகிறது. அதாவது தமிழக அரசு சார்பாக ஏதாவது ஒரு அமைப்பில் பத்து பேர் கொண்ட உறுப்பினராக இருப்பவர்களும், உறுப்பினராக நியமிக்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்களாலும் தான் சொல்லப்படுகிறது. இந்த வாக்கியத்தை கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் இதில் சாய்பாபாவின் புகழும், பெருந்தன்மையும் தான் ஓங்கி நிற்கிறது.

அறிஞர்களின் நிலை ரொம்ப பரிதாபமாகத்தான் இருக்கிறது. கலைஞரை அல்ல. கேவலம் சாய்பாபாவைக் கூட விமர்சிக்க முடியாத நிலையில் தான் இருக்கிறது இன்றைய இவர்களது பகுத்தறிவு.

கலைஞர்சாய்பாபா சந்திப்பு, பெரியாருக்கும் திராவிட இயக்கத்திற்கும் கிடைத்த வெற்றி. சாய்பாபாவுக்கு கிடைத்ததோ ‘மாபெரும்’ வெற்றி. கடவுளா கொக்கா?

தமிழனுக்குத் தமிழன் மீது ஈடுபாடு இல்லை. தமிழனை தமிழனே மதிப்பதில்லை. என்று தான் தமிழினம் ஒன்று சேரும்?

க.தமிழ்ப்பரிதி, பெருந்துறை.

தமிழன் என்ற காரணத்திற்காகவே ஒரு நபரை ஆதரிக்க முடியுமா? இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் கூட தமிழன் தான். அவரு கூட சேர்ந்து கிட்டு பெரியார் சிலையை இடிக்கச் சொல்றீங்களா? ப.சிதம்பரம் பச்சை தமிழர் தான். ஆனாலும் அவர் நம்மவர் தான் என்கிற எண்ணம் தமிழர்களுக்கு ஏற்பட மாட்டேங்குது. லாலு பிரசாத் இந்திக்காரர்தான். ஆனாலும் அவரு மேலே தமிழர்களுக்கு மரியாதை இருக்கத்தானே செய்யிது. ஒரு நபரை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்பதை தீர்மானிப்பது அரசியல், பொருளியல், சமூக காரணங்கள் தான்.

‘முல்லைப் பெரியாறு, சேலம் ரயில்வே கோட்டம், மேற்கு வங்கத்திற்கு கடல் சார் பல்கலைக் கழகம்’ மார்க்சிஸ்டுகள் தங்கள் மாநில மக்களின் நலனில் அக்கறையோடு இருக்கிறார்களே? இது பாராட்டக் கூடியதுதானே?

கல்பனா தாசன், நாங்குனேரி.

இந்த ‘அக்கறை’ மக்கள் மேல் கொண்ட அன்பினால் அல்ல, மிக மட்டரகமான ஓட்டு கட்சி அரசியலின் தந்திரம். தன் மாநில மக்களின் ஓட்டை பெறுவதற்கு இரண்டு இன மக்களிடம் கலவரத்தைத் தூண்டக்கூட இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. எந்த இன மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, யார் தரப்பில் நியாயம் இருக்கிறதோ, அவர்களின் சார்பாக நிற்கிறவன் தான் மார்க்சிஸ்ட். முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கும் ஆதரவாக தன் சொந்த மாநில மக்களையே சுட்டு வீழ்த்துகிற இவர்களுக்கா மாநில மக்கள் மீது அன்பிருக்கிறது?இவர்களா மார்க்சிஸ்டுகள்? வெட்கம்.

கன்னட பிரசாத்திற்கு தமிழ் இதழ்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனவே?

சிவகுமார், திருப்பூர்.

ஒரு வேளை “தொழில்’ ஒற்றுமை காரணமோ என்னவோ? ஏன்னா இரண்டு பேருமே நடிகைகளைதான் முதலீடா வைச்சி தொழில் நடத்துகிறார்கள். தமிழக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கன்னட பிரசாத்தின் ‘தீரமிக்க’ வாழ்க்கை வரலாற்றை பத்திரிகைகள் போட்டி போட்டு வெளியிடுகின்றன. அவைகளை அவர் படிக்க நேர்ந்தால், திடுக்கிட்டிருப்பார். “இவர்கள் நம்ம “தொழிலுக்கு’ வந்தால் நம்மநெலமை அதோ கதியாகியிருக்கும். நல்லவேளை ஜெயில் தண்டனையோடு தப்பிச்சோம்’ என்று. கன்னட பிரசாத் நடிகைகளுக்கு, தொழில் அதிபர்களுக்கு, பணக்காரர்களுக்கு “மாமா வேலை’ பார்த்தார். இந்தப் பத்திரிகைகள் வாசகர்களுக்கு ‘மாமா வேலை’ பார்க்கிறது.

27 சதவீத இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் படாதபாடு படுகிறதோ?

நசீர், பூந்தமல்லி.

இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் “செக்’ வைக்கும் போதெல்லாம் மத்திய, மாநில அரசுகள் பெரியார், அம்பேத்கரை போல் தன்னை பாவித்துக் கொண்டு “இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும்வரை ஓய மாட்டோம்’ என்று ஆவேசப்படுகின்றன.

உச்சநீதிமன்றம் எதிர்காலத்திற்கான இடஒதுக்கீட்டை கேள்விக்குட்படுத்துகிறது. மத்தியமாநில அரசுகளோ நிகழ்காலத்தில் இருக்கிற இடஒதுக்கீட்டையே காலி செய்து கொண்டிருக்கிறது. அரசு துறைகளில் மட்டும்தான் இடஒதுக்கீடு இருக்கிறது. அரசு துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதிலும், அரசு துகைளை பலவீனப்படுத்தி தனியார் துறைகளை ஊக்குவிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றன ‘சமூக நீதி’ அரசுகள். பொதுத்துறை படிப்படியாக முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே நிலைத்து விட்டால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 100 சதவீதம் ஒதுக்கீடு இருந்தால் கூட அதை எந்த எரவாணத்தில் கொண்டு சொருகுவது?

இதுமாதிரியான இரட்டை வேடத்தை குறிப்பதற்குத்தான் அன்றே சொன்னார்கள், “படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயிலா?” என்று. (அப்போ அந்தக் காலத்திலேயே பெருமாள் கோயிலை, ராமாயணம் படித்தவர்கள் இடித்திருக்கிறார்கள்)

Posted in கேள்வி - பதில்கள் | 3 பின்னூட்டங்கள்

ஜுன் 2007

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

தலித் எழுத்து இப்போது பரவலாக பத்திரிகைகளில் வருகிறதே?
டேவிட், திருச்சி.

தாழ்த்தப்பட்ட மக்கள் உரிமைகளுக்காகப் போராடும்போது அவர்கள் மீது வன்முறைகள், வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகிறது.

திட்டமிட்டு நிகழ்த்தப்படுகிற அந்த அநீதிகளை துணிவோடு அம்பலப்படுத்தி, வன்முறை நிகழ்த்துபவர்கள் எந்த ஜாதிக்காரராக இருந்தாலும் அந்த ஜாதிக்காரரின் பெயரைச் சொல்லி கண்டிப்பதுதான் தலித் எழுத்து. இந்த வகை செய்திகள், எழுத்துகள் தமிழ் பத்திரிகைகளில் ஒரு single column கூட வருவதில்லை. மற்றபடி தலித்தாக பிறந்த ஒருவரிடம் கட்டுரையும், கவிதையும், கதையும் எழுதி வாங்கி ‘சிறப்பான’ முறையில் பிரசுரிப்பதற்கு தலித் மனேõபாவம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

அதற்கு பார்ப்பன மனோபாவமே போதும். ஆனந்த விகடனும், கல்கியும், காலச்சுவடும் அதைத்தானே செய்கின்றன.

சென்ற இதழில் இளையராஜாவை பற்றிய கேள்விக்கு பதில் ஒத்துக் கொள்வதுபோல் இருந்தாலும், இளையராஜாவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக காட்டும் தொனி தென்பட்டதே?
க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில்.

தமிழ்நாடு கடவுளையே கடுமையாக விமர்சித்த பூமி. அப்படியிருக்கையில் இளையராஜா மட்டும் விமர்சனங்களுக்கு விலக்கானவர் இல்லை. இளையராஜாவை பற்றியான விமர்சனங்களில் அவரை ஒரு கலைஞராக மதிப்பிடாத தன்மை இருப்பதையே சுட்டிக் காட்டினேன்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற திரை இசை அமைப்பாளர்களை பார்ப்பன எதிர்ப்பாளர்களாகவோ, அல்லது பார்ப்பனியத்தை ஆதரிக்காதவராக இருக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அவர்களை சிறந்த திரை இசை அமைப்பாளர்களாக மட்டும் பார்க்க தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இளையராஜாவை மட்டும் அப்படி பார்ப்பதில்லை. திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் கடுமையாக எதிர்த்து ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதிய பெண் பித்தனும், முழுநேர குடிகாரனும், பார்ப்பன மோகியுமான கண்ணதாசனை அதையெல்லாம் தாண்டி, ‘அவர் ஒரு குழந்தை மாதிரி’ என்றும், இசை அமைப்பாளர்களின் திறமையால் (மெட்டுகளால்) உயிர் பெற்று இருக்கும் அவருடைய அர்த்தமற்ற திரைப்பாடல்களுக்காக, ‘கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்’னு கொண்டாடுகிற முற்போக்காளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். (மெட்டுகளை உருவிவிட்டு, கண்ணதாசன் பாடல்களை படித்துப் பாருங்கள், அது அவர் கவிதைகளை விடவும் கேவலமாக இருக்கும்) அவர்களும் இளையராஜாவின் பார்ப்பன ஆதரவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

பார்ப்பன ஆதரவாளரும், சுயஜாதி அபிமானமும் கொண்ட, ‘நான் தேவன்டா’ என்று வசனம் பேசியவரும், தனது கடைசி காலங்களில் ஜாதி சங்க மாநாடுகளில் கலந்து கொண்ட சிவாஜி கணேசனை அதையெல்லாம் தவிர்த்து, ‘மிகச் சிறந்த கலைஞர்’ என்று அவர் திறமையைத் தனித்துப் பார்க்க தெரிந்திருக்கிறவர்கள்தான், சுயஜாதி அபிப்பிராயம் சுத்தமாக இல்லாத இளையராஜாவை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

கமல்ஹாசன் போன்ற கழிசடைகளின் தீவிர ரசிகனாக இருக்கிற ஞாநி போன்றவர்கள் கூட உலகத்தரம் வாய்ந்த இந்தியாவின் ஒப்பற்ற ஒரே கலைஞர் இளையராஜாவைத்தான் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்த மோசடிப் போக்கைத்தான் விமர்சித்தேன்.

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்தியா முழுக்க எதிர்ப்பு கிளம்பியிருக்கு. அப்படியிருந்தும் அந்த நிறுவனம் பின்வாங்குவதாகவே தெரியலையே? முதலாளித்துவம் நேர்மையாகவே நடந்து கொள்ளாதா?
என்.எஸ்.சவுமியா, அரியலூர்.

ஏன் நடந்து கொள்ளாது. நேர்மையாக நடந்து கொள்வது கொள்ளை லாபம் தரும் என்றால், முதலாளிகள் நேர்மைக்கு எதிராக செயல்படுகிற யாரையும் ஒழித்து, நேர்மையை நிலைநாட்டி கொள்ளை லாபத்தை அடைவார்கள்.

சும்மாவா சொன்னார் மாமேதை மார்க்ஸ், ‘முதலாளித்துவம் தனக்கு லாபம் என்று தெரிந்தால் அது தனக்கான சவக்குழியைக் கூட தோண்டிக் கொள்ளும்’ என்று.

திரைப்படங்களில் பெரும்பாலும் வில்லன் களின் பெயர்கள் கிறிஸ்துவ, முஸ்லிம் பெயர்களே இடம் பெறுகிறதே?
இமானுவேல், கீழச்சேரி.

பிற சமயத்தவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியே அதற்குக் காரணம். வைணவ இதிகாசமான ராமாயணத்தில் கூட வில்லனின் பெயர் ராவணேஸ்வரன் தான். ராமாயணத்தின்படி ராவணன் பெண் பித்தன், அரக்கன் என்பது போலவே அவன் ஒரு சிவபக்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூடகருத்துக்காகவும், திராவிடர் எதிர்ப்புக்காகவும், பெண்ணடிமைத் தனத்திற்காகவும் பெரியார் இயக்கத்தால் கடும் தாக்குதலுக்கு உள்ளானது ராமாயணம். இன்னொரு புறம் அதன் சைவ சமய எதிர்ப்புக்காக சைவ சமயத்தைச் சேர்ந்த சிவபக்தர்களான மறைமலை அடிகள், இ.மு. சுப்பிரமணிய பிள்ளை போன்றவர்களாலும் தாக்குதலுக்கு உள்ளானது ராமாயணம் (இவர்களின் ராமாயண எதிர்ப்பை பெரியார் ‘குடியரசில்’ பயன்படுத்திக் கொண்டார்). இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் மிக நல்லவரான ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவராகவே இருக்கும். அதற்கும் முன்பு திராவிட இயக்கம் செல்வாக்கு பெற்றிருந்த காலங்களில், அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி போன்ற படங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழ்நிலையிலேயே வந்த திரைப்படங்கள் ‘ராஜாதேசிங்கு’ திரைப்படம் இந்து மன்னனுக்கும், இஸ்லாமிய தளபதிக்கும் இடையில் இருந்த நட்பை சொல்லியது.

அதற்கு பின்னர் வந்த பாவமன்னிப்பு படம் ஒரு படி மேலே போய் நேரடியாக திராவிட இயக்க கருத்தை மையமாக வைத்தே கதாபாத்திரங்கள் அமைந்தன. அந்தப் படத்தில் இஸ்லாமியராக வரும் நாகைய்யா மிகவும் நல்லவர். ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பார். இந்துக் குழந்தையை (சிவாஜி) தன் குழந்தையாக எடுத்து வளர்ப்பார். கிறிஸ்தவராக வரும் சுப்பையா அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவராக இருப்பார். இந்துவாக வரும் எம்.ஆர்.ராதாதான் அந்தப் படத்தின் வில்லன். படம் முழுக்க அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து கொண்டே இருப்பார்.

80களில் வந்த அடுக்குமல்லி (தேங்காய் சீனிவாசன்), படிக்காதவன் (நாகேஷ்) போன்ற திரைப்படங்களில் கூட நல்ல குணம் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரங்கள் இஸ்லாமிய பாத்திரங்களாகவே வந்திருக்கின்றன.

மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது. அதுவரை தமிழ் சினிமாவில் அரைகுறை ஆடை அணியும் பெண்களும் பல ஆண்களோடு சகஜமாக பழகும் பெண்களும், (கே. பாலசந்தரின் நூற்றுக்கு நூறு திரைப்படம்) காபரே நடனம் ஆடும் பெண்களும், கிறிஸ்தவர்களாகவே காட்டி கொண்டிருந்தார்கள். அதில் பெரிய வேடிக்கை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பெண்கள் யாரும் கிறிஸ்தவர்கள் இல்லை. பெரும்பாலும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த மாமிகளே.

அது சரி. மணிரத்தினம், விஜயகாந்த், அர்ஜுன், ஆர்.கே.செல்வமணி போன்ற இந்து ‘தேச பக்தர்கள்’ வில்லன்களுக்கு சிறுபான்மை மக்களின் பெயரை வைத்ததை புரிந்துகொள்ள முடிகிறது. கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகரும், இஸ்லாமியரான பாசிலும் வில்லன்களுக்கு சிறுபான்மை சமூகத்தின் பெயரை வைத்த மூடத்தனத்தை என்னவென்று சொல்வது?

பெரிய வேதனை திராவிடர் கழகம் தயாரித்த புரட்சிக்காரன் திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு பார்ப்பனர். வில்லன் இஸ்லாமியர். அதாங்க பின்லேடன்.

பிரமாணர்களோடு கூட்டு வைத்த மாயாவதியின் வெற்றி எதைக் காட்டுகிறது?
க. சீதாராமன் சென்னை.

பார்ப்பனியத்தை எதிர்த்து, டாக்டர் அம்பேத்கர் வழியில் அதிகாரத்தை பிடிப்பது சிரமமானது என்பதால், பாஜக வழியை பின்பற்றி இருக்கிறார் மாயாவதி. அதனால்தான் பாஜகவின் ஓட்டு வங்கியை பெருமளவு தனதாக்கி இருக்கிறார்.

பதவி ஏற்றவுடன் சேதப்பட்டிருந்த அம்பேத்கர் மணி மண்டபத்தை புதுப்பித்திருக்கிறார். இது தலித் மக்களுக்காக செய்தது. ‘உயர் ஜாதியைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்று குரல் எழுப்பி இருக்கிறார். இது பார்ப்பனர்களுக்காகச் செய்தது. இப்போது சொல்லுங்கள் வெற்றி யாருக்கு? டாக்டர் அம்பேத்கர் எழுதிய சட்டத்தை எக்காரணம் கொண்டும் திருத்தவே கூடாது என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் ‘பார்ப்பனர்களுக்கும் இடஒதுக்கீடு’ என்று கோருகிற மாயாவதியை ஆதரிக்கிறார்கள் சிலர். இது எந்த வகையில் நியாயம்? மாயாவதியின் கோரிக்கை, அம்பேத்கர் எழுதிய சட்டத்தை அம்பேத்கரின் எதிர் நிலையில் இருந்து திருத்த வேண்டும் என்று கோருவதுதானே?

அம்பேத்கர் மணிமண்டபத்தை புதுப்பித்து விட்டு, டாக்டர் அம்பேத்கரையே சேதப்படுத்தி இருக்கிறார் மாயாவதி.

குழந்தைகளுக்காக ஜெயேந்திரரை அழைத்து கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்தியிருக்கிறார்களே? இது எதைக் காட்டுகிறது?
பாபு, காட்பாடி

‘கோடி, கோடியா கொட்டிக் கொடுத்தாக் கூட நான் ஆபாசமா நடிக்கமாட்டேன்’ என்று நடிகைகள் பத்திரிகைகளில் பேட்டி கொடுப்பாங்க. அந்த பேட்டிக்கு பக்கத்திலேயே, ரொம்ப ஆபாசமான போஸ்ல அந்த நடிகையோட படத்தையும் போட்டுருப்பாங்க. அதுமாதிரி இருக்கு இந்த தமாசு.

ஒரு படத்துல வடிவேலு, செமத்தியா உதை வாங்கிட்டு வந்து நொந்துபோய் உட்காந்திருப்பாரு. அந்த பக்கமா போற ஆளு, வடிவேலுவோட வீரத்தைப் புகழ்ந்துட்டுப் போவாரு. அதுக்கு வடிவேலு பக்கத்துல இருக்குறவருகிட்ட சொல்லுவாரு ‘ஏன்டா, இன்னுமாடா நம்மள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?” உடனே பக்கத்துல இருக்குறவரு சொல்லுவாறு, ‘அது அவிங்க தலவிதி”.

வைரமுத்துவிற்கு பிறகு இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்களில் யார் சிறப்பாக எழுதுவதாக கருதுகிறீர்கள்?
என்.பாஷா, சேலம்.

கண்ணதாசனை மிகச் சிறந்த பாடலாசிரியராக மாற்றியவர் வைரமுத்து. வைரமுத்துவை மிகச் சிறந்த பாடலாசிரியராக மாற்றி விட்டார்கள் இன்றைய இளம் திரைப்பட பாடலாசிரியர்கள். ஆபாச பாடல்கள் எழுதிய வைரமுத்து, ஒரு குற்ற உணர்வின் காரணமாக, ‘அது என் கருத்தல்ல, என்னை என் கவிதைகளில் பார்க்க வேண்டும். பாடல் வரிகள் கதாபாத்திரத்தின் கருத்து. இயக்குநரின் எதிர்பார்ப்பு’ என்ற விளக்கமாவது கொடுத்தார்.

‘சமூகத்திற்கு எதிராக சிந்திக்கிறோமே’ என்கிற குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல், சினேகன், பா.விஜய், நா.முத்துக்குமார் போன்ற பாடலாசிரியர்கள் எவ்வளவு மோசமான பாடல்களை எழுதினாலும், ரொம்பவும் ‘மிடுக்கோடு’ பேட்டித் தருகிறார்கள். இதில் முத்துக்குமாரின் இலக்கிய ரசனை அவரின் பாடல்களை விடவும், ஆபத்தானதாக இருக்கிறது. பார்ப்பனிய சிந்தனை கொண்ட சுந்தர ராமசாமி, சுஜாதா போன்ற திராவிட இயக்க எதிர்ப்பாளர்களின் எழுத்துக்களை சிலாகிக்கிறார்.

நாத்திகனாக, பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு உள்ளவராக, திராவிட இயக்க ஆதரவாளராக, திராவிட இயக்க பரம்பரை இலக்கியவாதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் வைரமுத்து. ஆனால் இளம் பாடலாசிரியர்களோ, ‘பிழைப்புவாதமே உத்திரவாதம்’ என்று தெளிவாக இருக்கிறார்கள். ஒரு வேளை, ‘அய்யோ இவ்வளவு ஆபாச வரிகள் வேண்டாம். கொஞ்சம் மாத்தி எழுதுங்க’ என்று பாடலாசிரியர்களிடம் இயக்குநர்கள் கேட்டுக் கொள்கிறார்களோ என்னவோ?

பின்குறிப்பு: ஜெயேந்திரர் கைதின் போது, புதிய கலாச்சாரம் இதழில் நான் எழுதிய ‘பார்ப்பனப் பத்திரிகைகள் சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ என்ற கட்டுரையில், ‘ராமனின் மனைவி சீதையின் மீது பிரியப்பட்டான் ராவணன். இப்படி அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டதினால் அவனுக்குத் தக்க பாடம் கற்பித்து, அவனைக் கொன்ற பார்ப்பனியம், இந்திரனை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது. இந்த இந்திரனின் ஃபுல் டைம் ஒர்க் அடுத்தவர்களின் மனைவியோடு உறவு கொள்வதே” என்று எழுதி இருந்தேன். இதை பெரியார் படத்தின் பாடல் வரிகளில் தனது சிந்தனையாகவே பயன்படுத்தி இருக்கிறார் வைரமுத்து. நமக்கு மனசுக்குள்ளார வருத்தமாக இருந்தாலும், எல்லோரும் சொல்வதுபோல் நாமும் சொல்லி வைப்போம். ‘அதனால் என்னங்க கருத்து போய் சேர்ந்தா சரி’.

சென்ற இதழில் திராவிட இயக்கம் தமிழுக்கு நிறைய செய்ததாக சொன்னீர்கள். ஆனால் அவர்களின் ஆங்கில மோகத்தை மறைத்து விட்டீர்களே?
செண்பகா, வாலாசாபாத்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் திராவிட இயக்கத்தின் அரசியல் நிலை பார்ப்பனியத்திற்கு, சமஸ்கிருதத்திற்கு எதிர்ப்பு. பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவு’ என்ற நிலையில்தான் இருந்தது. மொழி குறித்த திராவிட இயக்கத்தின் நிலையை இதன் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். திராவிட இயக்கம் ஆங்கிலத்தை தமிழுக்கு எதிராக நிறுத்தவில்லை. சமஸ்கிருதத்திற்கு எதிராக நிறுத்தியது. இந்திக்கு எதிராக நிறுத்தியது. ஆங்கிலம் நன்கு தெரிந்த பாரதியார் போன்ற பார்ப்பனர்கள் தங்கள் ஆன்மாவை சமஸ்கிருத்தின் மேல் வைத்திருந்தது போலவே, ஆங்கிலத்தை ஆதரித்த திராவிட இயக்கத்தவர்கள் தங்கள் ஆன்மாவை தமிழ் மீதுதான’ வைத்திருந்தார்கள். அதனால்தான் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களையே சூட்டினர்.

சைவ சமயத்தை சேர்ந்த தமிழறிஞர்கள் சிலர் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு சைவ கடவுள் பெயராக இருந்தால் போதும், அது சமஸ்கிருதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வைத்தார்கள். சமீபத்தில் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தவர்கள்கூட ஆங்கில திரைப்படத் தலைப்புகளைத்தான் எதிர்த்தார்கள். சமஸ்கிருத பட தலைப்புகளை எதிர்க்கவில்லை. பார்ப்பனரான பாரதியார் இருந்து, பார்ப்பன மனோபாவம் கொண்ட ஜெயகாந்தன் வரை சொல்வது இதைதான், ‘சமஸ்கிருதம் போற்றி வளர்க்கப் பட்டிருந்தால் ஆங்கிலம் இங்கே நுழைந்திருக்காது”.

திராவிட இயக்கத்தினர் சொன்னது இதைத்தான். ‘ஆங்கிலத்தை நுழைதாவது சமஸ்கிருதத்தை ஒழித்துக் கட்டவேண்டும்”
ஆம், இது வெறுமனே மொழிப் பிரச்சினை மட்டுமல்ல.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எப்போதும் தமிழ் அடையாளத்தோட இருக்கிறார். வெளிநாட்டுக்கு சென்றால்கூட வேட்டியிலேயே செல்கிறார்?
க. கலைசெல்வன், ஓசூர்.

அதுசரி, அவரு வேட்டிய கட்டிக்கிட்டு, இந்திய விவசாயிகளின் கோவணத்தைக் கூட உருவிடுறாரே, அதுக்கு என்ன பண்றது?

பரவாயில்லை சுபவீக்கு கலைஞர் நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறாரே?
சு.விசயன், நாகப்பட்டினம்.

இவ்வளவு காலம் சுபவீ கஷ்டப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அவர் கலைஞருக்கு மட்டும் நன்றி சொன்னால் போதாது, பொடா கைதியாக இருந்த வைகோவிற்கும் நன்றி சொல்ல வேண்டும். ஒரு வேளை வைகோ ஜெயலலிதாவிடம் போய் சேராமல் கலைஞருடனே இருந்திருந்தால் சுபவீக்கு இவ்வளவு ‘முக்கியத்துவம்’ கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். அதேபோல் பொடாவில் கைதாகியிருந்த நெடுமாறனும் திமுகவிற்கு எதிர்நிலையில் நின்றது சுபவீக்கு கூடுதல் ‘பலம்’ தான். தன்னோடு தோழமையோடு இருப்பவர்களின் பலவீனங்களை மறைமுகமாக கிண்டல் செய்வதில் கலைஞர் வல்லவர். சுபவீக்கு கொடுத்திருக்கிற கலைமாமணி விருதுகூட அப்படி உரிமையோடு கிண்டல் செய்தது மாதிரிதான் இருக்கிறது.

திராவிட இயக்க அறிவாளிகளிடமும், திமுகவிடமும் ஒரு வில்லனை போல் இருந்த ரவிக்குமார், அப்படியே தன் நிலையை குணச்சித்திர வேடத்திற்கு மாற்றிக் கொண்டார். கலைஞரைப் பற்றி கடுமையாக விமர்சித்த ரவிக்குமார், இப்போது அவருக்கான மறுப்பை அவரே எழுதிக் கொண்டிருக்கிறார்.

சும்மா சொல்லக்கூடாது, ரங்காராவ் மாதிரி குணச்சித்திர வேடத்தில் ரவிக்குமாரோட ‘பெர்ப்பாமன்ஸ்’ ரொம்ப பிரமாதம். அவருக்குக் கூட கலைமாமணி விருது கொடுத்திருக்கலாமே?

ராமர் பாலம் உண்மையா? பொய்யா?
ஏ.ரவீந்திரன், திருச்செந்தூர்.

‘ராமர் கோயிலை இடித்து விட்டு பாபர் மசூதியைக் கட்டி விட்டார்’ என்று சொல்வதிலும் ‘லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ராமர் கட்டிய பாலம் கடலில் மூழ்கி விட்டது’ என்று பா.ஜ.க.வும், ஜெயலலிதாவும் சொல்லுகிற இந்த கற்பனையிலும் ராமரை ஒரு சோனகிரியாக, கோழையாக, திறமையற்றவராகவே நமக்கு காட்டுகிறது.

பின்ன என்னங்க, ஒரு சாதாரண மன்னன் பாபரிடம் சர்வ வல்லமை பொருந்திய கடவுள் ராமன் தோத்து போயிருக்காரு.

பெரிய அவதார புருஷன் ராமன் கட்டுன பாலம், கார்ப்பரேஷன் கான்ட்ராக்டர் கட்டுன பாலம் மாதிரி கடல்ல மூழ்கிப் போயிருக்கு, பொண்டாட்டிய வேற ராவணன் தூக்கிட்டுப் போய்ட்டாரு. அப்புறம் எப்படிங்க இவரு கடவுளு?

Posted in கேள்வி - பதில்கள் | பின்னூட்டமொன்றை இடுக

விழிப்புணர்வு, ஜனவரி – பிப்ரவரி, 20007

ஜப்பானிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்களாமே? நமது பிரதமரே ஜப்பான் நாடாளுமன்றத்தில் பெருமையோடு குறிப்பிட்டுப் பேசியிருக்கிறாரே?
டி.குமாரசாமி, கோயம்புத்தூர்

பெரியாரிடம் ஒருவர் வந்து, “அய்யா, ஜப்பான்ல கூட அலகு குத்துறாங்களாம், சாமி ஆடுறாங்களாம். என்னங்கய்யா அந்த நாட்டுல்ல கூட இப்படி” என்று வருத்தப்பட்டாராம். அதற்கு பெரியார், “மூடநம்பிக்கையும், காட்டுமிராண்டித்தனமும் ஒட்டு மொத்தமா நம்ம நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம்னு நினைச்சீங்கிளா?”ன்னு திருப்பிக் கேட்டாராம்.

ஆனாலும் நம்ம பிரதமர் ‘அஞ்சா நெஞ்சன் பாட்சா ரஜினி ரசிகர் மன்ற தலைவர்’ மாதிரி, ரஜினியைக் குறிப்பிட்டு பேசினதை தவிர்த்து இருக்கலாம். எங்க நாட்ல இருந்த பெரியம்மையும், காலராவும் இப்போ உங்க நாட்லேயும் வந்திருக்கிறதைப் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்குன்னு சொல்ல முடியுமா?

என்னங்க இப்படி ஆயிடுச்சி? முரசொலி அறக்கட்டளை சார்பில் ஜெயகாந்தனுக்கு கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதே?
கோ.செங்குட்டவன், திருக்குவளை.

23.4.2005 அன்று மாலை மயிலாப்பூர் ஆர்.கே.சபாவில் ‘ஸம்ஸ்கிருத ஸேவா ஸமிதி’ சார்பாக ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவில், “வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்”, “தமிழை விட சமஸ்கிருதம் உயர்வானது. சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது”, “தமிழறிஞர்கள் தன்னைத் தானே நக்கிக் கொள்கிற நாய்கள்” என்றெல்லாம் ஜெயகாந்தன் பேசிய, அநாகரிகமானப் பேச்சை அந்த மேடையிலேயே ஏறி நேரிடையாக ஜெயகாந்தனிடம், கண்டித்தவன் நான். பிறகு அதை வெளி உலகத்துக்கு அம்பலப்படுத்தியதன் விளைவாக, உணர்வாளர்கள் ஜெயகாந்தனை மன்னிப்பு கேட்க வைத்தார்கள். ஆனால் முரசொலி அறக்கட்டளை விருது வழங்கி கவுரவிக்கிறது.

ஜெயகாந்தனின் அடிப்படை அரசியல் பெரியார் எதிர்ப்பு, திராவிட இயக்க எதிர்ப்பு. திராவிட இயக்க எழுத்தாளர்களை எழுதவே தெரியாத ‘முட்டாள்களாக’ சித்தரிப்பதில் ஜெயகாந்தனும் வல்லவர். அதிலும் குறிப்பாக கலைஞரின் தமிழை. அந்த ஜெயகாந்தனுக்குத்தான், முரசொலி அறக்கட்டளை சார்பாக ‘கலைஞர் விருது’. இது திராவிட இயக்க வரலாற்றில் கரும்புள்ளி. கலைஞருக்கு, தன்னை எப்போதும் பாராட்டிக் கொண்டிருப்பவர்களை விட, அவரை கடுமையாகத் தீட்டித் தீர்ப்பவர்கள், பாராட்டி விட்டால் அவர்களை அவருக்கு அதிகம் பிடித்துவிடுகிறது. அதுவும் இலக்கியவாதிகளாக இருந்தால் இன்னும் விசேக்ஷம்தான்.

ஜெயலலிதா ஒரு நள்ளிரவில் மிக மோசமான முறையில் கலைஞரைக் கைது செய்தபோது, அந்தக் கைதை ஆதரித்து, ’எதுக்கு போலிஸ் கிட்ட சண்டித்தனம் பண்றாரு. கைது பண்ணா போகவேண்டியதுதானே’ என்று பேசியவர்கள், இப்போது கலைஞரின் அன்புக்குரியவர்களாக இருக்கிறார்கள். அன்று அவரின் கைதைக் கண்டித்த பெரியார் தொண்டர்கள் இன்று தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கிறார்கள். நினைக்கவே நெஞ்சு பூரிக்கிறது. என்ன சொல்வது? கலைஞரின் ஆசான் அண்ணாவின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘வேந்தே இதுதான் காலக்குறி’

இந்த ஆண்டு கலைஞர் விருது ஜெயகாந்தனுக்கு. அடுத்த ஆண்டு ஜெயேந்திரனுக்கா?
(திராவிட இயக்க எதிர்ப்பாளரான, ஜெயகாந்தனுக்கே நம் பெயரிலான விருதை தந்து விட்டோம் என்ற மகிழ்ச்சி கலைஞருக்கு இருக்கலாம். போன ஆண்டு உணர்வாளர்கள் தெரிவித்த எதிர்ப்பில் நாறிப்போன தன் பெயரை சரி செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் ஜெயகாந்தனுக்கும் இருக்கலாம்)

பெரியார் சிலை இடிப்பு கண்டிப்பு, அதே சமயத்தில் பெரியார் சிலையை வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் அறிக்கை குழப்பமாக இருக்கிறதே?
சி. கோகிலா, திருக்காட்டுப்பள்ளி.

இதில் குழப்பம் ஒன்றமில்லை. ஜெயலலிதா தெளிவாகத்தான் அறிவித்திருக்கிறார். ஒருவர் தனது எழுத்து அல்லது பேச்சின் துவக்கத்தில் ஒரு விசயத்தையோ அல்லது ஒரு நபரைப் பற்றியோ அளவுக்கு அதிகமாக புகழ்ந்து சொல்லுகிறார் என்றால், அதன் பின் பகுதியில் அதற்கு நேர் எதிராக சொல்லப் போகிறார் என்று அர்த்தம்.

பெரியார் பற்றி புகழ்ந்தும், பிறகு பெரியார் சிலை இடிப்பாளர்களைக் கண்டித்தும், “அவரது (பெரியார்) பெயருக்கும் புகழுக்கும் எந்த ஒரு சிறு களங்கமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நம் எல்லோருடைய கடமையாகும்” என்கிற ஜெயலலிதாதான், பத்திரிகையாளர் சந்திப்பில் பெரியார் சிலையை இடித்தவர்கள் என்ன காரணம் கூறினார்களோ அதையேத்தான் சொல்கிறார், “தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்களில் பெரியார் சிலைகள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் பிரச்சினைகள் எழவில்லை. ஸ்ரீரங்கத்திலேயே வேறிடத்தில் பெரியார் சிலையை நிறுவலாம். அச்சிலை வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது” என்கிறார்.

ஆமாம், உத்திரப்பிரதேசத்தில் எத்தனையோ இடங்களில் ராமருக்கு சிலைகள் இருக்கிறது. ஆனால் ‘பாபர் மசூதிக்குள்தான் சிலை வைப்போம்’ என்று அடாவடி செய்கிற ஆட்களை ஆதரித்து, அங்கு ‘ராமருக்கு கோயில் கட்டியே தீர வேண்டும்’ என்று சொன்ன ஜெயலலிதாதான், பொது இடத்தில் முறையான அனுமதியோடு நிறுவப்பட்ட பெரியார் சிலையை கண்டிக்கிறார்.

‘அப்சலுக்கும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் உடனே தண்டனையை நிறைவேற்ற வேண்டும். நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது’ என்று சட்டத்தை ‘மதித்து’ பேட்டியளிக்கிற ஜெயலலிதாதான், ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்த பிறகும் அதை கண்டிக்கிறார். ஜெயலலிதா அறிக்கையின் நோக்கம் பெரியார் சிலை இடித்தவர்களை கண்டிப்பதல்ல. பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்பட்டதையும், ராமர் சிலை உடைக்கப்பட்டதையும், எரிக்கப்பட்டதையும் கண்டிப்பதே. அதனால்தான் பெரியார் சிலை இடித்தபோது அறிக்கை தராமல், ராமர் சிலை உடைக்கப்பட்டப் பிறகுதான் அறிக்கை தந்திருக்கிறார், இந்த சமூக நீதி காத்த வீராங்கனை.

எல்லா பொதுத் துறைகளையும் தனியார் நிறுவனங்களுக்கு அதுவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கிறது மத்திய அரசு. கேட்டால், அவர்கள் திறமையாக லாபகரமாக நடத்துவார்கள். அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்கிறார்கள். மக்களும் ‘தனியார்தாங்க சூப்பர்’ என்கிறார்கள். உண்மைதானா?
கே.டில்லி, சிதம்பரம் 1.

உண்மைதாங்க, தனியார் நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக அன்னிய நிறுவனங்கள் பெரும் லாபத்தோடுதான் நடத்துவார்கள். அந்த லாபம் சாதாரண லாபம் அல்ல கொள்ளை லாபம். கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் நாட்டின் நலனுக்கல்ல, குறைந்த பட்சம் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குக் கூட நன்மை புரியமாட்டார்கள். ஆட்குறைப்பு என்ற ஆயுதத்தால், அவர்கள் அடிக்கிற முதல் அடியே தொழிலாளர்கள் வயிற்றில்தான். நிர்வாக குறைபாடுகள் இருந்தாலும், பொதுத் துறைதான் மக்களுக்கானது.

தனியார் துறையின் மோசடியை புரிந்து கொள்ள ஆம்னி பஸ் ‘சேவை’யே ஒரு உதாரணம். இந்த பஸ்களில் சாதாரண நாட்களில் ஒரு கட்டணமும், பண்டிகை நாட்களில் மிக அதிகமான கட்டணமும் வசூலிக்கப்படும். சீட்டுகள் நிறைந்தால்தான் பஸ் ‘கண்’ டைமுக்கு கிளம்பும். இல்லையேல் அது புறப்பட்ட இடத்தையே சுற்றி சுற்றி வரும். இருவர், மூவர்தான் பயணிகள் என்றால் அந்த ‘டிரிப்பே’ கேன்சல் ஆகி பயணிகள் ‘அம்போ’ என்று இறக்கி விடப்படுவார்கள். ஆனால் அரசு பேருந்து அப்படியில்லை. ஒரே ஒரு பயணியாக இருந்தாலும் அவருக்காக அது தன் பயணத்தை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் அது நமது நிறுவனம்.
கொள்ளையடிப்பதில் தனியார் பஸ் முதலாளியே இப்படி என்றால், ஏகாதிபத்திய நிறுவனங்களின் சூறையாடலை சொல்லவும் வேண்டுமோ?

கே.டில்லி, உங்க ஊர் பெயரை தன் பெயராகக் கொண்ட ஒருத்தர், உங்க பேர் கொண்ட ஊர்ல நிதியமைச்சரா இருக்காரே அவரு கூட சொல்றாரு, ‘அன்னிய முதலீடு, நிர்வாகம் நாட்டை முன்னேத்தும்’னு. அது உண்மையா இருந்தா, நிதியமைச்சர் பதவிய ‘நோக்கியா’ கம்பனிக்கும், பிரதமர் பதவிய ‘கோக கோலா’ கம்பெனிக்கும் நேரடியாவே கொடுத்திருலாமே? அவுங்க ஒட்டுமொத்தமா நாட்டை முன்னேத்திட்டு போறாங்க.

தமிழில் பெயர் வைத்தால், வரி விலக்கு, படப்பிடிப்புக்கான கட்டணக்குறைப்பு, திரையரங்குகளில் கட்டணக் குறைப்பு என தமிழக அரசு தமிழ் சினிவிற்கு சலுகைகளை அள்ளி வழங்குகிறதே?
சு.தமிழ், வேலூர்.

தமிழ் சினிமாவிற்கு செய்கிற நன்மை, தமிழர்களுக்கு செய்கிற தீமை என்பதை தமிழக அரசு உணர வேண்டும். தமிழ் எம்.ஏ. படித்தவர்களுக்கு தனியார் துறைகளில் சுத்தமாக வேலை இல்லை. அரசு நிறுவனங்களிலும் ஏறக்குறைய அதே நிலைதான்.

தமிழ் பெயர் கொண்ட சினிமாவிற்கு வரிவிலக்கு. தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கிற தமிழனுக்கு நடுத்தெரு. நன்றாகத் தான் இருக்கிறது தமிழ் வளர்ச்சி. சினிமாகாரர்களுக்கு சலுகை. அன்னிய நிறுவன ஆலைகளுக்கு அனுமதி. சலுகை. இந்த இரண்டில் மட்டும் கலைஞருக்கும் ஜெயலலிதாவிற்கும் நல்ல கருத்து ஒற்றுமை.

தமிழ் வளர்ச்சிக்கு ஒரே வழி, ‘தமிழ் வழியில் படிக்கிறவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை’ என்று அறிவிப்பதே. இப்படி சட்டம் கொண்டு வந்தால், இயல்பாகவே ஆங்கில வழி பள்ளிகள் எல்லாம், தமிழ் வழி பள்ளிகளாக மாறிப் போகும். கல்வி வியாபாரிகளும் தமிழ் உணர்வாளர்களான மாறிப் போவார்கள். அதற்கு சமீபத்து உதாரணம் சினிமாக்காரர்கள்.

‘திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வையுங்கள்’ என்று பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகளும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்கள், கமல்ஹாசனும், சூர்யாவும் கலைஞர்களின் உரிமையில் தலையிடக்கூடாது. கதைக்குப் பொருத்தமான தலைப்புதான் வைப்போம்’ என்று சவடால் பேசினார்கள். ‘நமது இனமுரசு’ சத்யராஜ் வேண்டுமென்றே இனஉணர்வோடு, ‘இங்கிலீஷ்காரன்’ என்று படத்திற்குப் பெயர் வைத்தார். அரசு ‘வரிவிலக்கு’ என்ற அறிவித்தவுடன், சினிமாக்காரர்கள் எல்லாம் மறைமலை அடிகளாக மாறிப் போனார்கள்.

நடிகை பத்மினி, நடிகை ஸ்ரீவித்யா இவர்களின் மரணத்தைப் பற்றி ஆனந்த விகடன் இதழில் சுஜாதாவும் ஞாநியும் ஒரே மாதிரியாக எழுதியிருந்தார்களே? அதெப்படி ஒரே இதழில் ஒரே மாதிரியான கட்டுரையைப் பிரசுரிக்கிறார்கள்?
கோ. வானதி, சேலம்.

அது கட்டுரை எழுதறவங்க யார் அப்படிங்கறதை வைச்சி ‘சமூகம்’ முடிவு பண்ணும்போலும். ஆனா அதுல பிரச்சினை அது இல்லை. நடிகை பத்மினியையும், ஸ்ரீவித்யாவையும் சம திறமையாளர்களாக மதிப்பிட்டதுதான். (ஸ்ரீவித்யாவைப் போல் திறமையான நடிகை பத்மினி – சுஜாதா) சவுகார் ஜானகி, லட்சுமி மாதிரி ஸ்ரீவித்யாவும் திறமையான நடிகைதான். ஆனால் பத்மினி ஒரு லெஜன்ட். தமிழ் சினிமாவை அழகுபடுத்திய எம்.ஆர்.ராதா, மனோரமா, சிவாஜி கணேசன், பாலையா வரிசையில் பத்மினியும் ஒருவர்.

ஸ்ரீவித்யா இளம் வயதிலேயே முதிர்கன்னியின் தோற்றத்திலும் பிறகு குணச்சித்திர வேடத்தில் நடித்தவர். அதன் பிறகு ‘வீட்டில் சும்மா இருக்க வேண்டாமே’ என்பதற்காக மூத்த காதாநாயகர்ளுக்கு அம்மாவாக நடித்தவர். மற்றபடி மிகச் சிறப்பாக குறிப்பிட்டு சொல்லும்படி எதுவம் அவர் சாதித்து விடவில்லை.

ஆயிரம் பாவனைகள் சொல்லும் பத்மினியின் முகமும், தனது உடல்மொழியால் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்திய பாங்கும், தனது நாட்டியத்தின் நளினமான அசைவுகள் மூலமும் உலக புகழ்பெற்றவர் பத்மினி. (சோவியத் அரசு பத்மினிக்கு தபால்தலை வெளியிட்டிருக்கிறது)

‘நலந்தானா?’ என்று அவர் விசாரித்தது இன்றும் தமிழ் ரசிகர்களுக்கு, மகிழ்ச்சியோடு ஞாபகம் இருக்கிறது. ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ பாடலுக்கு அவர் காட்டிய பாவனை அழகோ அழகு. பத்மினி ஒரு கலைஞர். ஸ்ரீவித்யா ஒரு நடிகை.
இப்படியிருக்கையில் இருவரையும் ஒரே மாதிரியாக ஒப்பிடுவது தந்திரமான அரசியலாகவே இருக்கிறது.

ஞாநி இப்படிதான் சில நேரங்களில் செய்து விடுவார். பெரியாரை பாரதியோடு ஒப்பிடுவார். சிவாஜியும் நாகேசும் மிகச் சிறந்த நடிகர்கள் என்பார். (நாகேஷ் நல்ல குணசித்திர நடிகர். மற்றப்படி அவருடைய காமெடி பலமுறை ரிகர்சல் பார்த்து நேர்த்தியாக ‘தயாரிக்கப்பட்ட’தாக இருக்கும். இயல்பாக இல்லாததால் அவருடைய காமெடி பார்வையாளர்களை சிரிக்க வைக்க நிறைய சிரமப்படும். பல நேரங்களில் சிரிப்பே வராமல் சீனே முடிஞ்சிடும்)

காலச்சுவடு உலகத் தமிழ் இதழின் ‘பாரதி 125’ எப்படி?
பத்ம விஸ்நாதன், மைலப்பூர்.

சிறப்பு. மிக சிறப்பு. ஒரு ஆளு நம்மளவர். ஆனா ஊதாரி என்று தெரிந்தால் கூட, ஊதி, ஊதி அவனை எப்படி உலகத் தரத்துக்கு உயர்த்துவது என்பதை தெளிவாக ‘போட்டோ’ (எழுத்தில் கிராபிக்ஸ்) பிடித்து காட்டுயிருக்கிறார்கள், ‘பாரதி 125’ல். ஒருத்தர் நேர்மையளார், கொள்கையில் உறுதியானவர், பெரிய சிந்தனையாளர் ஆனால் ‘நம்பளாவாவுக்கு வேட்டு வைக்கிறவர்’ என்ற தெரிந்தால், உடனே ‘ஆய்வு, நடுநிலை, அறிவுப்பூர்வமான விவாதம், நிறை குறை என்ற அலசல்’ என்று தங்களது ‘அறிவு நாணய’த்தைப் பயன்படுத்தி பொய், புரட்டுகளை கொண்டு எப்படி ஆப்படிப்பது?’ என்பதற்கு 2004 செப்டம்பர் காலச்சுவடு வெளியிட்ட ‘பெரியார் 125’ மிகச் சிறந்த உதாரணம்.

ஆம், பாரதியின் பார்ப்பன இந்து மனதை நாம் நிருபித்தபோதும், கஞ்சா புகையில் கலைந்து போன அவரின் தேசப்பற்றை சுட்டிக்காட்டிய பிறகும் (மருதையனின் ‘பாரதி அவலம்’, வாலாசா வல்லவனின் ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதி’, ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி.) அறி[வு நாணயத்தோடு அதை ஒத்துக் கொள்ளவோ, இல்லை அதற்கு மறுப்பு சொல்லவோ வக்கற்றவர்கள், எந்தக் ‘கீறலும்’ இல்லாமல், ‘பாரதி 125’ என்று பாரதியை சாஸ்டாங்கமாக நமஸ்கரித்து இருக்கிறார்கள்.

சமீபத்தில் பெரியார் சிலையை ஸ்ரீரங்கத்தில், ‘இந்து மக்கள் கட்சி’யை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியது போல், 2004 செப்டம்பர் காலச்சுவடு இதழ் பெரியாரின் நேர்மையை சேதப்படுத்தியது. இந்து மக்கள் கட்யின் ஈனச் செயலுக்கு மிகச் சிறந்த எதிர்வினை இருந்தது. ஆனால் காலச்சுவடுக்கு?

‘சுயமரியாதை’ அதென்னமோ பெரியார் கட்சிக்காரங்களுக்கு மட்டும்தான் சொந்தம் மாதிரி பேசுறாங்கா? எல்லாருக்கும் சுயமரியாதை இருக்குங்க? பி.எஸ். சுப்பிரமணியசாமி, திண்டுக்கல்.

உண்மையில் சொல்லனும்னா பெரியார் கட்சிக்காரர்களுக்குத்தான் சுயமரியாதையே இருக்கக் கூடாது. ‘சமூக சுயமரியாதைக்காக தன் சுயமரியாதையையே பலிகொடுப்பவன்தான் உண்மையான சுயமரியாதைக்காரன்’ என்பதே பெரியாரின் நிலை. அதனால்தான் கடவுளை செருப்பால் அடித்த பெரியார் தன் மீது செருப்பை விட்டெறிந்த நபரைப் பார்த்து, ‘ஒரு செருப்பை வைத்தக் கொண்டிருப்பதால் உனக்கும் பயன் இல்லை. எனக்கும் பயன் இல்லை. இன்னொரு செருப்பையும் என் மீது விட்டெறி” என்றார்.

மதத்தை, சாதியை கடவுளை மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டிப் பேசிய பெரியார், தன்னைப் பற்றி கேவலமாக பேசிய, எழுதிய கி.ஆ.பெ. விஸ்வநாதம், ப.ஜீவானந்தம் போன்றவர்களின் அவதூறுகளுக்கு பதில் சொன்னதில்லை.

தன்னை தனிப்பட்ட முறையில் தாக்குகிறவர்களை பெரியார் ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. சுருங்கச் சொன்னால், பெரியாருக்கு மத, ஜாதி, ஆண் என்கிற உணர்வு இல்லாதது மாதிரியே, சுயமதிப்பு கூட சுத்தமாக இல்லாதவர். தன்னை மற்றவர்கள் உயர்வாக மதிப்பிட வேண்டும் என்கிற எண்ணம் அவருடைய பேச்சில் எழுத்தில் எங்கும் பார்க்க முடியாத ஒரு அதியசம்.

பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதரிக்க வேண்டும். ஆண்களை எதிர்க்க வேண்டும். பெண்களை ஆதரிக்க வேண்டும் என்று முன் முடிவோடு அரசியலுக்கு நுழைந்தவர் அல்ல பெரியார். ‘இவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் செய்வது அநியாயம்’ என்பவரே பெரியார்.

ஆக சுயமரியாதை என்பது அநீதியை கண்டு பொங்குவது. அதற்கு சமீபத்திய உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் திராவிட கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர். பெரியார் சிலை இடிப்பு விவகாரத்தில் இவர்களின் உணர்வு சுயமரியாதையோடு இருந்தது.

விழிப்புணர்வு, ஜனவரி – பிப்ரவரி, 20007.

Posted in கேள்வி - பதில்கள் | பின்னூட்டமொன்றை இடுக

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

தொழிலாளர்களின் போராட்டம், பஸ் மறியல், ரயில் மறியல் என்று எப்போது பார்த்தாலும் பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடைஞ்லாக இருக்கிற இவைகளை தடை செய்து விட்டு, ஊர்வலங்களை மட்டும் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமான பகுதியில் வைத்துக் கொண்டால் என்ன?
-என்.டி.ராமன், சென்னை.

ஒதுக்குப் புறமாக என்றால் எங்கே? முதுமலை காட்டுக்குள்ளேயா? அப்புறம் அங்கேயும் வனவிலங்குகளுக்கு தொல்லையா இருக்குதுன்ணு மேனகா காந்திக்கு சொந்தக்காரங்க வந்து குறுக்கே நிப்பாங்க.

மக்கள் தங்கள் உரிமைகளை கோரி நடத்துகிற போராட்டங்களை மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடத்தும் போதே, அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இன்னும் ஒதுக்குப் புறம் என்றால், ‘நக்சலைட்டு’ன்னு முத்திரை குத்தி உள்ளே வைச்சிருவாங்க.

உண்மையில் பொது இடங்களில் பெரும் இடைஞ்சலாக இருப்பது – கோயில் திருவிழாக்கள், சாமி புறப்பாடுகள், கோயில் கும்பாபிஷேகங்கள்தான். ஆடி மாசம் வந்தா “அம்மனோட அலறல்’ சத்தம் தாங்க முடியலை.

அறுபத்தி மூவர் திருவிழான்னு பத்து நாளைக்கு ரோட்டை மடக்கி பாடாய் படுத்துறாங்க, அதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதா?

‘கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாம் இணைகிற மையப்புள்ளி ஒன்று இருக்கிறது’’ என்கிறார்களே, அது என்ன மையப்புள்ளி?
-க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில்.

 ஜாதி. முற்போக்கு அம்சங்கள் எதுவும் இல்லாதவர்கள் தங்களை நேரடியாக ஜாதி உணர்வாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ்’ ன்னு பேசுற இந்த ‘நம்மாளு’ ங்கதான் ஜாதிக்கு நிறைய ரகசியப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள். அதுல ஒண்ணுதான் இந்த மையப்புள்ளி. இந்த உணர்வு பார்ப்பன அல்லாத ‘முற்போக்கனவர்கள்’ மத்தியிலும் அதிகமாக இருக்கு. பார்ப்பனர்களை குறை சொல்ல இவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை என்பதே நமது கருத்து. இந்த விசயத்துல இவுங்கள விடவும் ரஜினி ரசிகர்கள் முற்போக்கானவர்கள்தான். இந்த மையப்புள்ளியைப் பத்தி ஒரு உதாரணத்தின் மூலமாகவே பார்க்கலாம்.

சுஜாதா, மதன், ஞாநி இந்த மூம்மூர்த்திகளில் ஞாநிதான் ‘முற்போக்கானவர்’ என்கிற தோற்றம் இருக்கிறதல்லவா, அது மாயத் தோற்றம். உண்மையில் இந்த மூவரையும் இணைக்கிற மையப்புள்ளி ஒன்றல்ல, இரண்டு இருக்கிறது. 1. ஆனந்த விகடன் 2. கமல்ஹாசன் உலகத்தின் எந்த முற்போக்கு சக்திகளையும் கடுமையாக விமர்சிக்கிற இந்த மாமேதைகள் இந்த இரு புள்ளிகளிடம் மட்டும் சமரசம் அல்ல, சரணாகதியாய் இருக்கிறார்கள்.

ரஜினியும் கமலும் இணைந்து நடித்தக் காலத்தில் ஒரு வாரப் பத்திரிகையில், ‘எழுத்தாளர்’ சுஜாதா ‘கமலஹாசனை போன்ற அழகான நடிகர்கள் பக்கத்தில் இப்படி அசிங்கமான நடிகர்’ என்று ரஜினியை குறிப்பிட்டு எழுதியதாக நண்பர் தீஸ்மாஸ் ஞாபகப்படுத்தினார்.

அதே போல் ஞாநியின் – ‘ரஜினி, டாக்டர். கிருஷ்ணசாமி, திருமாவளவன் எதிர்ப்பை’ கமல்ஹாசனோடு தொடர்புபடுத்திதான் புரிந்து கொள்ள வேண்டும். ‘சண்டியர்’ படத்தின் தலைப்பை மாற்ற டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்த்த போதுதான் அவரை கண்டித்திருக்கிறார் ஞாநி. ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தின் பெயரை தமிழில் வைக்க சொன்னபோதுதான் அவர் திருமாவளவனை கண்டித்திருக்கிறார். ஞாநிக்கு டாக்டர் அம்பேத்கர் என்று ஒரு தலைவர் இந்தியாவில் இருந்தது தெரியுமா என்பது கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது. காந்தியவாதியின் தொனியில் காந்தியை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். டாக்டர் அம்பேத்கரைப் பற்றி எதவாது குறிப்பிட்டு இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.

ஞாநியின் ‘குமுதம் எதிர்ப்பை’ ஆனந்த விகடனோடு தொடர்புபடுத்திதான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனந்த விடகன் வேறு, இந்த மூவரும் வேறு வேறு வேறு அல்ல. ஆனந்த விகடனை கழித்து விட்டு இந்த மூவரையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், இந்த மூவரின் உருவம் நம் கண்களுக்கு புலப்படாமலே போகும்.

‘’அகம் வேறு, பிரமம் வேறு அல்ல. அகம்தான் பிரமம், பிரமம்தான் அகம்.’ ’கமல்-ஆனந்த விகடன்-சுஜாதா-மதன்-ஞானி ’ இந்த அய்ந்து புள்ளிகளையும் இணைத்தால் ……………………………………..

பொதுவாக புள்ளிகளை இணைத்தால் கோலம் வரும். ஆனால் இந்தப் புள்ளிகளை இணைத்தால் ‘நூல்’ வரும். இந்த நூல் பலபேருக்கு உடலில் இருக்கும். சில பேருக்கு மனதில் இருக்கும். இதுதான் ஆதிசங்கரர் தனது அத்துவைதைதத்தில் சொல்லியிருக்கிறாரோ?

‘நீங்கள் பாம்பாக பார்க்கும் போது கயிறு. கயிறு என்று நினைத்துப் பார்த்தால் பாம்பு’ என்று.

ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் இருவரில் உங்களை அதிகம் கவர்ந்தது யார்?
-எம்.டேவிட், திருச்சி.

யார் இவர்கள். இவுங்க எதுக்கு என்னைய கவர்ராங்க?

சிவாஜி நடித்த பாசமலர் தமிழில் ஒரு குறிபிடத்தக்கப் படம்தானே?
 -டி.சிவராமன், நன்னிலம்.

பாசமலர் படத்தை தமிழ் தெரியாத ஒரு நபர் பார்த்தால், ‘அந்தக் காதலனும் காதலியும் கடைசி வரைக்கும் ஒன்னு சேராம போயிட்டாங்களேன்னு’ ரொம்ப வருத்தப்படுவார்னு, எப்பவோ என் நண்பருக்கு நண்பர் ஒருவர் சொன்னதா ஞாபகம். தமிழ் சினிமாவில் ரொம்ப அருவருக்கதக்க முறையில் ஒரு உறவு கொச்சைபடுத்தப்பட்டது என்றால், அது அண்ணன்-தங்கை உறவுதான். எம்.ஜி.ஆர். தன் படங்களில் கதாநாயகியை விட தங்கச்சியைத்தான் அதிக அளவுக்கு கட்டிப் பிடித்து ‘பாசத்தை’ வெளிகாட்டுவார்.

இப்படி தமிழ் சினிமா கதாநாயகர்கள் தங்கச்சிகளை கட்டிபிடிச்சி நடிக்கிறதை பார்க்கிற பார்வையாளர்கள் தப்பா நினைக்க போறங்க அப்படிங்கறதுக்காகத்தான், ‘தங்கச்சி, தங்கச்சி’ என்று வசனம் பேச வைச்சாங்க போலிருக்கு. நடைமுறையில் எந்த அண்ணனும் தன் தங்கைகளை, தம்பிகளை ‘தங்கச்சி’ ‘தம்பி’ என்று அழைக்க மாட்டார்கள். பெயர் சொல்லிதான் அழைப்பார்கள். முன் பின் தெரியாத வயது குறைந்த நபர்களைதான் ‘தம்பி’ என்று அழைப்பார்கள். ‘தங்கச்சி’ என்கிற வார்த்தை அதற்குக் கூட பயன்படுவதில்லை. ‘இது என் தங்கச்சி’ என்று சுட்டிக் காட்டுவதற்குதான் பயன்படுகிறதே ஒழிய, விளித்தலுக்கு அல்ல.

இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல்தான் இன்றுவரைக்கும் படம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். படம் எடுத்தவங்க, நடிச்சவங்க எல்லாம் நிஜ வாழ்க்கையில் அக்கா-அண்ணன்-தங்கை-தம்பியா இருக்கிறவங்கதானே. அப்புறம் சினிமா அப்படின்னா மட்டும் எங்கிருந்துதான் இப்படி பொத்துக்கிட்டு வருதோ பாசம்?

எல்லா டி.வி. நிகழ்ச்சிகளிலும் பாட்டுப் போட்டி என்கிற பெயரில் குழந்தைகளை, சிறுவர்களை சினிமாவின் ஆபாச பாடல்களை பாட வைப்பதும் ஆட வைப்பதுமாக இருக்கிறார்களே?
-செண்பகா, வாலாசாபாத்.

ஒரு பழையபடத்துல, ஒரு எட்டு வயது சிறுமி காதல் பற்றியும் அதன் மனவேதனைப் பற்றியும் பாட்டுப் பாடி நாட்டியம் பழகுவது போல் காட்சி. அதைப் பார்த்த என்.எஸ். கிருஷ்ணன் ‘’எட்டு வயசு குழந்தை பாடற பாட்டாட இது?’’ ன்னு குழந்தையின் தந்தையை ஓங்கி ஒரு அறை விடுவாரு. அடி வாங்குனவரு, ‘’ஏன்ணே என்னை அடிக்கிறீங்க? காதல்ங்கறது தப்பு இல்லன்ணே. அன்புதான் காதல்’’ன்னு சொல்லுவாரு. அதற்கு என்.எஸ்.கே., ‘’அப்போ அதை அன்புன்னே சொல்ல வேண்டியதுதானடா. ஏன்டா காதல்ன்னு சொல்றே’’ன்னு இன்னொரு அறை விடுவாரு. என்.எஸ்.கே. மாதிரி யாராவது நாலு அப்பு அப்புனாதான் எல்லாம் சரிபட்டு வருமோ என்னவோ?

‘முற்போக்காளர்கள்’ சில பேர் திடீர் என்று உடலுறவு, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பதைப் பற்றி எல்லாம் எழுதுகிறார்களே?
-சுப. சீனிவாசன், காரைக்குடி.

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பதைப் பற்றி எழுதுவதெல்லாம் இருக்கட்டும். முதலில் வாயை சுத்தமா வைச்சிக்கிட்டு அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்லட்டும். மனுசனா பொறந்தா பல்லு வெளக்க வேண்டாமங்க. சமூகத்தில் கூட நல்லா பல்லு விளக்குகிறவர்கள் ‘சுத்தமற்ற’ தாழ்ந்த ஜாதியாம். சரியா பல்லு விளக்காதவங்கதான் ‘சுத்தமான’ உயர்ந்த ஜாதியாம்.

சில பேரு பேசுற வசனம் மட்டும், ரொம்ப சுத்த பத்தமா இருக்கு. வாயப் பாத்தா ஜெயேந்திரனுக்கு சொந்தக்காரர் மாதிரி இருக்கு.

உங்களுக்கு யாருடைய கேள்வி பதில் ரொம்ப பிடிக்கும்?
-வி.சுசிலா, சென்னை.

பெரியாருடைய பதில்கள். பத்திரிகைகளில் பதில் சொல்வது பெரிய விஷயமல்ல. பொதுக்கூட்டங்களில் பார்வையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்வது சாதாரணமனதல்ல. அதில் ஈடுஇணையற்றவர் தந்தை பெரியார். அப்படித்தான் ஒரு முறை பெரியார் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போது ஒருவர், ‘’அடிக்கடி சுயநலம், பொதுநலம் என்கிறீர்களே, சுயநலம் என்றால் என்ன? பொதுநலம் என்றால் என்ன?’’ கேட்டிருக்கிறார். கேட்ட அடுத்த வினாடியே, ‘’மழை பொழிவது பொதுநலம். குடை பிடிப்பது சுயநலம்’’ என்று கவிதையாய் பதில் தந்திருக்கிறார் பெரியார். பின்னாட்களில் இதைதான் இயக்குநர் வஸந்த், கிளம்பிக் கொண்டுபோய் தனது நேருக்கு நேர் படத்தில் வசனமாக வைத்துக் கொண்டார்.

தனிப்பட்ட முறையில் நேரடியாக கடுமையாக தாக்கி கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கூட பொறுமையாக பதில் தந்திருக்கிறார் பெரியார்.

நினைத்துப் பாருங்கள், பெரியாரை தவிர வேறு தலைவர்கள் பேசிய கூட்டத்தின் நடுவே முதலில் எழுந்து நிற்கமுடியுமா? அப்படி நின்று விட்டால் வீட்டிற்குப் போய் சேரத்தான் முடியுமா?

தேவாரம், திருவாசகத்திற்கு சைவ மட ஆதினமே தடையாக இருக்கிறதே?
-பாண்டியன், திருமங்கலம்.

தேவாரம், திருவாசகம் சமஸ்கிருதத்தை எதிர்த்து ஆலய வழிபாட்டை தமிழில் நடத்துவதற்கும் தமிழை வளர்ப்பதற்காகவும் உருவானதில்லை. சமண சமயத்தை ஒழிப்பதற்காக உருவானது. சமணர்களோடு அனல் வாதம் புனல் வாதம் செய்து சைவசமயத்தை மீட்டதாக கதை சொல்கிறார்களே, அது கதைதான். சமணர்களை வாதத்தில் வெல்ல முடியாத ஞான சம்பந்தம், மாணிக்கவாசகன், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி போன்ற கோழைகள் மன்னர்களை தூண்டி விட்டு சமணர்களை நெருப்பில் வாட்டியதைதான், ‘அனல்’ வாதம் என்று கதைவிடுகிறார்கள்.

பார்ப்பன-பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களின் கூட்டுக் களவானித்தனம்தான் தேவாரம்-திருவாசகம்-பெரியபுராணம். பொண்டாட்டியக் கூட்டிக் கொடுத்தவன்-பொண்டாட்டியத் தொடமாட்டேன்னு சொன்னவன்-இவனுங்களுக்கெல்லாம் காட்சிக் கொடுத்த சிவன், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உண்மையான பக்தர் நந்தனுக்கு காட்சி கொடுக்காமல், தில்லைவாழ் அந்தணர்களை விட்டு கொளுத்தச் சொன்னவன்தானே. (‘’அம்பலவர் அருளால் இங்கு அணைந்தோம் வெய்யஅழல் அமைத்து உமக்குத் தரவேண்டி’’-பெரியபுராணம்)

தேவாரம், திருவாசகத்தின் செயல் சமணத்தை வீழ்த்துவது-பார்ப்பனியத்தை தூக்கி நிறுத்துவது. அவ்வளவுதான். மற்றபடி அதை தமிழ் என்கிற கட்-அவுட் வைத்து எவ்வளவு தூக்கி நிறுத்தினாலும், ஒரு போதும் பார்ப்பனியத்திற்கு எதிராக அது நிற்காது. அதனால்தான் அதன் பின்னால் போன முற்போக்காளர்களையும் அது முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்திவிட்டது.

தேவாரம் புகழ் பெற்றிருந்த காலத்தில் ஒரு சித்தன், அவைகளின் மீது இப்படி துப்பினான், ‘’தாவாரம் இல்லை – தனக்கொரு வீடில்லை – தேவாரம் ஏதுக்குடி?’’

திருமணம் பெண்களுக்கு எதிரானது என்கிறார்கள். திருமணத்தை முற்றிலுமாக நிராகித்துவிட்டால் குடும்பம் என்கிற அமைப்பே நிற்கதியாகிவிடாதா?
-காமட்சி சுந்தரம், சென்னை.

குடும்பம் என்ன கதியாகுமோ அது எனக்கு தெரியாது. எப்படி பார்த்தாலும் நிச்சயம் திருமணம் பெண்களுக்கு எதிரானதுதான். செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா அது கல்யாணமா?

நடிகர் விஜயகாந்தை தொடர்ந்து நடிகர் சரத்குமாரும் தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரே?
-டி.கணேசன், சிவகாசி.

இவர்கள் இருவரும் நடிகர்களாக கொடுமைப் படுத்தியதையே பொறுத்துக் கொண்டார்கள் தமிழர்கள். அதனால் இவர்களின் மேடை நடிப்பையும் புரிந்து கொள்வார்கள். இவர்களின் நோக்கம் நாட்டைப் பிடிப்பதல்ல. அது முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். தேர்தலின்போது திமுகவிடமோ அல்லது அதிமுகவிடமோ கூட்டணி பேரம் பேசி ஒரு பத்து எம்.எல்.ஏ சீட்டு, நாலு எம்.பி சீட்டு வாங்கி வைச்சிக்கிட்டா பின்னால மத்த பேரம் எல்லாம் பேச வசதியா இருக்கும், அதுக்குதான் தனிக்கட்சி. ஏன்னா சில கட்சிகள் அப்படிதானே வண்டிய ஒட்டிக்கிட்டு இருக்கு. (அந்தக் கட்சிகளின் ஓட்டைதான் விஜயகாந்த் காலி பண்ணிக்கிட்டு இருக்கிறாரு.)

விஜயகாந்த்-சரத்குமார் இந்த இருவரில் விஜயகாந்தாவது தனது கட்சியை, தன் ஜாதிக்கு அப்பாற்பட்டு உருவாக்க முயற்சிக்கிறார். சரத்குமார் கட்சி சுத்தமான ஜாதி சங்கம்.

ஆகஸ்ட் 2007

விழிப்புணர்வு

Posted in கேள்வி - பதில்கள் | 7 பின்னூட்டங்கள்